"ஆயிரம் நிலவே வா"
இன்று நாம் சுவைக்கவிருக்கும் பாடல் காதல் ரசம் பொங்கித் ததும்பும் ஒரு பாடல்.
அடிமைப்
பெண் படத்தில் இடம் பெற்ற "ஆயிரம்
நிலவே வா" பாடல்தான் இன்றைய பாடல். கே.வி .மஹாதேவன் இசை. பி.சுசீலா , S.P.B பாடிய பாடல். S.P.B யின்
முதல் பாடல். S.P.B க்காக ஒரு மாதம் காத்திருந்து
ரெகார்ட் பண்ணப்பட்ட பாடல். ஆஹா. இந்த
குரலுக்காக ஒரு மாதம் காத்திருக்கலாம். தப்பே இல்லை. அவரின் குரலை
கடவுளே காதல் பாடல்களுக்காக
ஸ்பெஷல் ஆக வடிவமைத்து அனுப்பியிருப்பாரோ
என்னவோ. S.P.B க்காக ஒரு மாதம் காத்திருந்து ரெகார்ட் பண்ணக் காரணம் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை.
காதல் என்பதே முரண்பாடுகளுக்கு இடையே
ஏற்படும் சமன்பாடுதான். கவிதைக்கு பொய் மட்டும் அல்ல
,அந்த முரண்களும் அழகுதான். "நள்ளிரவு துணையிருக்க , நாமிருவர் தனியிருக்க" என்ற வரிகளில் உள்ள
அந்த முரண்கள் இந்த பாடலுக்கு எவ்வளவு
அழகை அள்ளித் தருகிறது என்பதை
அனுபவியுங்கள்.
பொய்கைக்கும் வேர்க்குமா? இதோ "பொய்கை என்னும்
பூமகளும் பூவாடை போர்த்திருந்தாள், தென்றல்
எனும் காதலனின் கை விலக்க வேர்த்து
நின்றாள்" என்கிறார் புலமை பித்தன். இப்படி
பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதல்,
காதல் மேலும் காதல். அப்புறம்
கதாநாயகியை விட குட்டி டிரஸ்
போட்ட கதா நாயகனை நான்
இந்த பாடலில்தான் பார்த்தேன். அப்புறம் நான் இதை சொல்லியே
ஆகணும். ஜெயலலிதா அவ்வளவு அழகு.
SPB இன் கொஞ்சும் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடலை.
ReplyDeleteNice.
ReplyDelete