Posts

Showing posts from May, 2021

" பூவே இளைய பூவே" பாடல் விமர்சனம் முழு பாடல் வரிகளுடன்

Image
  அவளை பூ என்று சொல்லலாமா? இல்லை பூவின் மகளல்லவா அவள்?  இளைய பூவே என்று அழைக்கலாம். ஒரே ஒரு பூவா அவள்? இல்லை இல்லை. உலகின் ஒட்டு மொத்த பூக்களையும் மலர்விக்கும் வசந்தம் அ ல்லவா அவள். அதுவும் வரம் தரும் வசந்தம். என் மடி மீது தேங்கும் தேன் அவள். அவள் எனக்கானவள்.  "பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத்தானே எனக்குத்தானே" இந்த" எனக்குத்தானே" என்று உச்சக்குரலில் மலேஷியா வாசுதேவன் பாடும் போது நாமும் நம் மனமும் இசை எனும் மலை உச்சிக்கு பறந்து செல்கிறது. வாய்ஸ் செம சூப்பர். அலை அலையாக வளர்ந்து கிடக்கும் இவள் கூந்தலை என்னவென்பது?  இரவுகளை இழை இழையாக பிரித்தால் அதுதான் இவளின் கூந்தலோ? "குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே" என்ன அழகான வர்ணனை          "இரவுகளில் இழை" இந்த வார்த்தைகள் திடுமென்று ஒரு கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் சென்று விடுகிறது அல்லவா? அவள் விழிகள் இரண்டும் கடல் ஆனதாம். இவர் மனம் அந்த கடலில் படகாக தத்தளிக்கிறதாம்.  இந்த கற்பனையை கேட்கும்பொழுது நம் மனமும் கடலில் படகாய் அலைபாய்கிறது அல்லவா? "விழி இரண்டு...