பொன்மாலை பொழுது
ஒரு பொன்மாலை பொழு தி ல், வைரமுத்துவுக்கு திரையுலகம் வாசல் திறந்து, வாரியணைத்துக் கொண்ட பாடல் . வைரமுத்து, எஸ்பிபி ,இளையராஜா, பாரதிராஜா என்ற வெற்றிக்கூட்டணி "ஹே ஹோ ஹோ லல்லல்லா" என்ற எஸ்பிபி தொடங்கும்போதே நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது இல்லையா. சூரியன் மறையும் அந்தி வேளையில் வானம் கொள்ளும் சிவப்பு நிறத்தை நானும் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் எவ்வளவு அழகான வர்ணஜாலம் என்று. நமக்கு கற்பனை அதைத்தாண்டி செல்லவே மாட்டேன் என்கிறது. ஆனால் வைரமுத்துவுக்கோ அது வான மகளின் நாணச் சிவப்பாக தெரிகிறது. உலகமே பார்க்க வெளிர் நீல உடை நெகழ்த்தி, கரு நீல உடை உடுத்தும் வானமகள் நாணாமல் என்ன செய்வாள்? பாவம் பெண்ணல்லவா? அவளின் அந்த வெட்கச் சிவப்பை கவிஞர்கள் கண்டு சொன்னால்தான் உண்டு. அதனால் என்ன, அவர்கள் சொன்ன பிறகாவது ரசித்து கொள்வோம். வைரமுத்துவின் வர்ணனை வரிகளையும், SPB யின் குரலையும் கேட்டுத்தான் வானமகள் நாணுகிறாளோ என்றும் ஒரு சந்தேகம் எனக்கு. "இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்" இரவின் நிலவொளி மரங்களின் வழியே நுழை...