Posts

" பூவே இளைய பூவே" பாடல் விமர்சனம் முழு பாடல் வரிகளுடன்

Image
  அவளை பூ என்று சொல்லலாமா? இல்லை பூவின் மகளல்லவா அவள்?  இளைய பூவே என்று அழைக்கலாம். ஒரே ஒரு பூவா அவள்? இல்லை இல்லை. உலகின் ஒட்டு மொத்த பூக்களையும் மலர்விக்கும் வசந்தம் அ ல்லவா அவள். அதுவும் வரம் தரும் வசந்தம். என் மடி மீது தேங்கும் தேன் அவள். அவள் எனக்கானவள்.  "பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத்தானே எனக்குத்தானே" இந்த" எனக்குத்தானே" என்று உச்சக்குரலில் மலேஷியா வாசுதேவன் பாடும் போது நாமும் நம் மனமும் இசை எனும் மலை உச்சிக்கு பறந்து செல்கிறது. வாய்ஸ் செம சூப்பர். அலை அலையாக வளர்ந்து கிடக்கும் இவள் கூந்தலை என்னவென்பது?  இரவுகளை இழை இழையாக பிரித்தால் அதுதான் இவளின் கூந்தலோ? "குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே" என்ன அழகான வர்ணனை          "இரவுகளில் இழை" இந்த வார்த்தைகள் திடுமென்று ஒரு கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் சென்று விடுகிறது அல்லவா? அவள் விழிகள் இரண்டும் கடல் ஆனதாம். இவர் மனம் அந்த கடலில் படகாக தத்தளிக்கிறதாம்.  இந்த கற்பனையை கேட்கும்பொழுது நம் மனமும் கடலில் படகாய் அலைபாய்கிறது அல்லவா? "விழி இரண்டு...

அதிசய ராகம் ஆனந்த ராகம் முழு பாடல் வரிகளுடன்

Image
  ஒரு கோப்பையிலே குடியிருந்த அந்த கோமானின் பாடல்களை கேட்கும் நமக்கும் அல்லவோ மயக்கம் வருகிறது. இருந்தும் அவரது பாடல்க ளை ரசிக்காமலா இருக்க முடிகிறது? இசையரசி அவள் . இசை ரசிகன் அவன். ரசனை கொஞ்சம் எல்லை மீறிப் போக அந்த இசையரசியையே ரசிக்க தொடங் குகி றா ன் அவன். அவன் யாரையோ காதலிக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் யார் அவள்?  என் இசை வகுப்பிற்கு பல பெண்கள் வருகிறார்கள். கல்யாணியும் வருகிறாள், கமலாவும் வருகிறாள் . எப்படி தெரிந்து கொள்வது என்றெண்ணிய அவள் அவனிடமே இந்த கேள்விக்கணையை தொடுக்கிறாள்  " உன் காதல் நாயகி யார் ? அவள் பெயர் என்ன ? ராகமா? மலரா? என்று. இந்தக் கேள்வியின் நாயகிதான் அவனின் காதல் நாயகியும் என்ற உண்மை அறியாமல். அப்பொழுது கே.ஜே. யேசுதாஸ் தன் மயக்கும் மந்திர குரலில் பாடலை தொடங்குகிறார் . அப்போது தொடங்குகிறது ஒரு "அதிசய ராகம்" "அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்" முதல் இரண்டு வரிகள் முடிந்ததும் வரும் அந்த மிருதங்க இசை உங்கள் மனதை துள்ளாட்டம் போட வைக்கும். அது ஒரு "ஆனந்த ராகம்" . இசை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. யாராக இருக்கும் ?அவள் யார...

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

Image
                             மீண்டும் ஒரு வர்ணனைப் பாடல் கண்ணதாசன் அவர்களின் அழகு தமிழில்.  நாயகியோ அழகி. நாயகனோ ரசிகன். நாயகன் நடை தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் கூட, தமிழின் கவிதை நடை கம்பீரம்  சற்றும் குறைய வில்லை அல்லவா?  தொடக்கத்தில் "ஆஹாஹா ஆஹா அஹா ஹஹா " என்று  ஒலிக்கும் எல் ஆர் ஈஸ்வரி  யின் ஹம்மிங் என்ன சொல்ல நான். இதை ரசிக்காத தமி ழ் நெஞ்சங்கள் உண்டா? ஆஹா ஆஹா ஆஹாஹா ! நம்மை  ஒரு மாய லோகத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறதே! பாடல் முழுதும் ஒரு கனவு சாங்  ஃபீல் கொடுத்து விடுகிறது இந்த ஹம்மிங். TMS கணீர் குரலில் ஒலிக்கும் "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" தான் வரையவிருக்கும் ஓவியத்திற்கு மாதிரியாக நிற்கும் நாயகி அவர் கண்களுக்கு சாகுந்தலையாக உருமாற்றம் கொள்வது அழகு. சரோஜாதேவி இந்த படத்தில் ரொம்ப அழகாக  இருப்பார். இயல்பாக நடித்திருப்பார். மாணிக்கமாய் ஒளி வீசும் அவள் கண்கள் சிந்தும் கலைக்கு எந்த கலையாவது ஈடாகுமா? அவள் இதழ...

அன்பே அன்பே கொல்லாதே

Image
பெண்களை வர்ணிப்பது என்றால் இந்த கவிஞர்களுக்கு கொள்ளை இன்பம்தான்.  அவர்களுக்கு மட்டுமா? கேட்கும் நமக்கும்தான்.   அம்புதான் கொல்லும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவரோ "அன்பே அன்பே கொல்லாதே" என்கிறார். அவரின் அன்பு காதலி அம்பு விழிகளால் கொல்கிறாளோ? பாடல் தொடக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் அந்த டான்ஸ் ஸ்டெப் ஒரு பார்பி டால் மாதிரி இருக்கும்.  அவ்வளவு அழகு. அந்த அழகுப் பெண் அவள் புன்னகையில் இவர் இதயத்தை வெடிக்கிறாளாம், உயிரை குடிக்கிறாளாம். இன்னும் என்னென்ன  பண்ணுகிறாள் என்று பார்ப்போம். "அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே"  கவிஞர் பிரம்மனை கஞ்சன் என்று இகழ்வதற்கும், வள்ளல் என்று புகழ்வதற்கும் சரியான காரணம் இருப்பது போல் தான் தோன்றுகிறது ஐஸ்வர்யா ராயை பார்க்கும்பொழுது.                                                ஐஸ்வர்யா ரா...