"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்


                            


மீண்டும் ஒரு வர்ணனைப் பாடல் கண்ணதாசன் அவர்களின் அழகு தமிழில்.  நாயகியோ அழகி. நாயகனோ ரசிகன். நாயகன் நடை தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் கூட, தமிழின் கவிதை நடை கம்பீரம்  சற்றும் குறைய வில்லை அல்லவா? 


தொடக்கத்தில் "ஆஹாஹா ஆஹா அஹா ஹஹா " என்று  ஒலிக்கும் எல் ஆர் ஈஸ்வரி  யின் ஹம்மிங் என்ன சொல்ல நான். இதை ரசிக்காத தமிழ்நெஞ்சங்கள் உண்டா? ஆஹா ஆஹா ஆஹாஹா ! நம்மை  ஒரு மாய லோகத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறதே! பாடல் முழுதும் ஒரு கனவு சாங் 

ஃபீல் கொடுத்து விடுகிறது இந்த ஹம்மிங்.


TMS கணீர் குரலில் ஒலிக்கும் "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?"


தான் வரையவிருக்கும் ஓவியத்திற்கு மாதிரியாக நிற்கும் நாயகி அவர் கண்களுக்கு சாகுந்தலையாக உருமாற்றம் கொள்வது அழகு.



சரோஜாதேவி இந்த படத்தில் ரொம்ப அழகாக  இருப்பார். இயல்பாக நடித்திருப்பார்.


மாணிக்கமாய் ஒளி வீசும் அவள் கண்கள் சிந்தும் கலைக்கு எந்த கலையாவது ஈடாகுமா? அவள் இதழ் சிந்தும் சுவையானது தூய தமிழ் சொல்லிற்கு இணையானது அல்லவா? என்று அவள் அழகை கவிஞர் சொற்சித்திரமாய் வரைய, அந்த அழகை நாயகன் திரைச்சீலையில் பொற்சித்திரமாய் வரைய நாம் சொக்கிப் போகிறோம்.



             


"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா

சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா"


அந்த மகேசனோ திருவாசகத்தில் உருக, இந்த மானுடன் அவளின் ஒரு வாசகத்தில் உருகுகிறான்.


"கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்"


உண்டு உண்டு என்று சொல்கிறது அவள் கண்கள். இல்லை இல்லை என்று சொல்கிறது அவளின் இடை. கவிதைகளில் இந்த முரண்கள் என்றும் அழகு.


பெண்மையின் உண்மை அழகு வெறும் உருவம் மட்டுமா? அவளின் தாய்மை அல்லவா? அவனிடம் அவள் காட்டும் தாய்மை உணர்வில் 

கம்பனின் காவிய நாயகி சீதை அவள் தாயாக இருப்பாளோ என்று எண்ணுகிறான். அவளிடமிருந்து வந்ததோ இந்த தாய்மை உணர்வு என்று எண்ணி மகிழ்கிறான். அவளை ஒப்பிட்டு மகிழ தமிழ் புலவர்களின் காவிய நாயகி மட்டும் பத்தவில்லை இவருக்கு . வடமொழி புலவர்களின் நாயகிளோடும் ஒப்பிட்டு பார்க்கிறார் கவிஞர் கண்ணதாசன்.காளிதாசனின் காவிய நாயகி சகுந்தலை அவளின் சேயாக  இருப்பாளோ என்று கற்பனை செய்து களிக்கிறான். அம்பிகாபதி அணைத்த அந்த காதல் நாயகி அமராவதி மறைந்தபின் பாவலர் அனைவருக்கும் தன் நாயகியே கதி என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறான்.


கவியரசர் கம்பனையும் , அவர் மகன் அம்பிகாபதியையும் ஒரே பாட்டில் கொண்டு வந்த கவிஞரின் திறமையே திறமை.


பாடல் முடியவும் நாயகன் வரைந்த படமும் முடிகிறது. அதை வந்து பார்த்து சரோஜாதேவி வெட்க புன்னகையோடு தலை குனிவது அழகு.




சிவாஜியை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? வெறும் முக பாவங்களாளேயே அசத்துகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், ஆலயமணி படத்தில் அருமையான பாடல். 

பாடல் வரிகள் கீழே.

 

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா

சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா


(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)


கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா

இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா


(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)


கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி


(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)


Youtube Link :

https://youtu.be/gLiZFaAbWb8

Comments

  1. Thanks for this song selection. Its mesmerizing song of the grt legends unforgettable. No match for kavinjar Kannadasan,TMS ad actors. Very sad that such gud songs are absent at present. Read this review many times still its so refreshing and highlight is that you provided the lyrics and going through the words of the legend itself is so beautiful. Thanks again and keep going. 🙏

    ReplyDelete
    Replies
    1. Thank you sir. Your comment encourages me more.

      Delete
  2. அருமையான பாடல். அழகான விமர்சனம். நீங்கள் நிறைய பழைய பாடல்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "