"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"
இது ஒரு நேயர் விருப்பப் பாடல்.
ஆழ்மனதில் நாம் நட்டுவைத்த நினைவுகள் தான் கனவு மரங்களாக வளர்கின்றன. சில நேரங்களில் விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்கும் வினோதங்களும் நடக்கின்றன.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே" இந்த மங்கை கண்ட கனவைப் பற்றி கேட்போம்.ஒரு இளம் விதவையின் மனதில் தோன்றும் எண்ணங்களை இவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடித்து இருப்பது கவிஞர் கண்ணதாசன். ஒரு சோகப் பாடலுக்கு இவ்வளவு அழகாக சுகமான இசையமைத்துக் கொடுத்திருப்பது விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். பி .சுசீலாவின் இனிய குரலில் "மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி ,மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி ?" என்று புன்னகையுடன் பாடல் தொடங்குகிறார் சௌகார் ஜானகி . அந்தக் கனவு சுமந்த கண்கள் ,சோகம் சுமந்த முகம், அதிலும் புன்னகை அழகின் ஜொலிப்பு. ஒரே லொகேஷன், ஒரே காஸ்டியூம் அந்த ஆர்டினரி காஸ்ட்யூமிலும் ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பெர்பார்மன்ஸ். "இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி ? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி ? " என்று விடை காண முடியாத ஒரு வினா எழுப்புகிறார் . அந்த வினா தோழிக்கா? நமக்கா ? என்று ஒரு வினா எழுகிறது என் மனதில். கனவில் கண்ட தன் கணவனுடன் காதலில் மகிழ்கிறாள் அவள். கண்விழித்து பார்க்கையில் கனவையும் காணவில்லை. கணவனையும் காணவில்லை. "அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி, பறந்து விட்டார் தோழி " என்று தன் வலிகளை வழி (வரி) நெடுக பதிவு செய்து கொண்டே செல்கிறாள் அவள். அதை புன்னகை திரையிட்டு மறைக்கும் லாவகம், அற்புதம்.கடலை திரையிட்டு மறைக்க முடியுமா இதோ இவள் கண்ணீர் கடலை புன்னகை திரையிட்டு மறைத்து விட்டாளே. உறங்கும் பெண்களை எழுப்பி விடாதீர்கள். அவர்கள் உறக்கத்திலாவது மகிழ்ச்சியோடு இருக்கட்டும் (ஹப்பா. இனி நாம ஜாலியா தூங்கலாம்). இளமையே கனவு போல் முடிந்து தான் விடுகிறது. "இளமையெல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம், " வாழ்ந்தவர், வீழ்ந்தவர் அனைவரும் அனுபவிக்கும் நிலை இது . "தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் " இன்றைய மனித குலமே இந்த ஒற்றை வரியில் தான் தேங்கி நின்று கொண்டிருக்கிறது.
"பாக்யலட்சுமி " படத்தில் வரும் சுகமான பாடல். இது சுசீலாவின் மயக்கும் குரலும் பாடலின் வரிகளும் மனதை நெகிழ்த்தும்.
இளையராஜாவை இசை உலகத்திற்கு இழுத்து வந்த பாடல் இது. அவருக்கு இசையின் மேல் ஒரு ஈர்ப்பை கொடுத்தது இந்த பாடல் என்று இளையராஜாவே சொல்லியிருக்கிறார். இதைவிட பெருமை வேற என்ன வேண்டும் இந்தப் பாடலுக்கு?
இந்த "தோழி "என்ற வார்த்தை கேட்க ரொம்ப இனிமையாக இல்லை ?
இந்த பாடலை பற்றி இன்னும் ஏதேதோ சொல்ல நினைக்கிறேன் "மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?"
இனி பாடலைக் கேட்டு மகிழுங்கள் .இல்லையில்லை மயங்குங்கள்.
https://youtu.be/HHZHrDDVwws
Fantastic as usual ♥️
ReplyDeleteஇதை படித்ததும் வேறு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது.
"சொன்னது நீ தானா?"
பாட்டுக்கு விமர்சனம் எழுதுங்கள் தீக்ஷா.
Sure ma. I too love that song.
Deleteபழைய பாடலின் தனித்துவமே அது கட்சியோடு ஒன்றி வருவதுதான். பாடல் வரிகள், சுசீலாவின் குரல், சௌகார் ஜானகி யின் expression , music, உங்கள் விமர்சனம் அத்தனையும் இனி மை.
ReplyDeleteஅருமை .
ReplyDeleteநினைக்க தெரிந்த மனமே பாடலும் ஆழமும் சோகமும் நிறைந்தது. முடிந்தால் அதற்கும் உங்கள் அழகு நடையில் விமர்சனம்
Sure ma. You can share it with your friends. Let them enjoy Tamil and songs
DeleteNice!
ReplyDelete