Posts

Showing posts from July, 2020

தொடு வானம் /Thoduvanam Thodugindra

Image
ஒரு நான்கு நிமிட பாடலுக்குள் இவ்வளவு விஷயங்களை வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கண்டெண்ட் ஃபுல் சாங்தான் இது. ரொமான்ஸ் , கண்ணீர், ‌ஹியூமர், த்ரில், ஒரு மர்டர் அனைத்தும் ஒரு பாடலில்.டைரக்சன் கே வி ஆனந்த்.  ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் அதை முன்னமே அறிந்த நாயகி. இப்பொழுது தான் அறிந்த நாயகன்.இந்த ஜென்மத்திலும் அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற வேதனையிலும் பதற்றத்திலும் பாடும் பாடல். தொடக்கத்திலேயே வரும் வயலின் மியூசிக்கை கேட்கும் போதே அந்த இசை கண்கள் மூடி ரசிக்கச் சொல்லும். ஆனால் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் வரும் காட்சிகள் உங்களை கண்கள் திறந்து ரசிக்கச் செய்யும். தொடக்கக் காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு வரும் தனுஷ் செம சார்மிங். "பாய் நெக்ஸ்ட் டோர்"  ஃபீல் கொடுப்பதுதான் தனுஷின் பிளஸ். ஹரிஹரன் வாய்ஸ் செம சூப்பர். சோகத்தை அலை அலையாய் பரப்புகிறது அவரின் குரல். "தொடு வானம் தொடுகின்ற நேரம்  தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்" இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியது, உயிரெல்லாம் உருகியது. உருகி முடிப்ப...

மயக்கமென்ன இந்த மௌனமென்ன /Mayakkam Enna Indha Mounam Enna

Image
இந்த உலகத்தை நிற்காமல் சுழல வைத்துக் கொண்டிருக்கும் ஒற்றை மந்திரச்சொல் "காதல். " உலக உயிர்களுக்கெல்லாம் தாஜ்மஹால் மூலம் தன் காதலை உரக்கச் சொல்லிய ஷாஜகான்  , தனது காதலி மும்தாஜுக்கு தன் காதலை உணர்த்தி இருப்பானா என்ற சந்தேகம் என் மனதிற்குள் இன்னும் இருக்கிறது.  அந்த விஷயத்தில் இந்த ஜமீன்தார் அந்த ஷாஜகானை மிஞ்சிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  நாமெல்லாம் காதல் பரிசளிக்க என்ன செய்வோம் ? ஒரு கிரீட்டிங் கார்டையோ,  ஒரு தாஜ்மஹால் பொம்மையோ, வாட்ச் அல்லது   மொபைலையோ தேர்ந்தெடுப்போம். மாதம் முத ல் தேதியா, கடைசி தேதியா என்பதைப் பொறுத்து பரிசு மாறுபடும். இவர் அளித்த காதல் பரிசு பாருங்கள் "இது இறந்து போன மும்தாஜுக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல உயிரோடு இருக்கும் என் காதல் தேவதைக்காக நான் கட்டிய வசந்த மாளிகை"  என்று நாயகன் கூறும்பொழுது நாயகி தடாலென்று மயங்கி விழாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.  நாயகிக்கும் நாயகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தும் நாயகனின் காதல்,  நாயகியை அந்த மலை உச்சிக்கே தூக்கிச் சென்று விடுகிறது அ ந்த "ஆனந்த" அதிர்ச்சியில...

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து/ Minnalai pidithu

இந்த கவிஞர்கள் பெண்களை வர்ணிக்க தொடங்கிவிட்டால் அவர்கள் கையில் உள்ள "பென்" களுக்கு கற்பனை சிறகு முளைத்து விடும் போல. பறந்து சென்று பிரம்ம லோகத்தில் நடப்பதை கூட பார்த்து வந்துவிடுகின்றன அவரது பேனாக்கள்.  கவிஞரின் பேனாவை கடன்வாங்கி இந்த நாயகன் எழுதும் கவிதையை பாருங்கள். கவிதை எழுதும்போது மென்மையாய் வருடும் இசை எழுதி முடித்ததும் அதிரும் இசையாகி அவனை விண்ணில் பறக்க வைக்கிறது. (மின்னலை பிடிக்கவோ?)  நம்மை தாளம் போட வைக்கிறது. விஜய் கியூட்டா இருக்கார். டான்ஸ் சூப்பரா இருக்கு.  இசை மணிஷர்மா. காதை உறுத்தாத இனிமையான இசை . முக்கியமாக இந்த இனிமையான பாடல் வரிகளை இசைக்குள்  அமிழ்த்தி விடாமல் வெளியே உலவவிட்டு இருப்பதற்கே அவருக்கு ஒரு கிரேட் சல்யூட். உன்னி மேனன் வாய்ஸ் அசத்தல். இதோ இந்த வரிகளை கேளுங்கள் வெறும் மின்னலைப் பிடித்து அவளை செய்தால் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்று மேகத்தில் துடைத்து பாலிஷ் பண்ணி அவளை படைத்தானாம் பிரம்மன். படைத்துவிட்டு பார்த்த பிரம்மனுக்கு தன்னிடம் இருக்கும் முழு கற்பனை சக்தியையும் செலவழித்து இவளைப் படைத்த விட்டோமே , இனி பெண்களை படைக்க , அவர்களு...

கலைமகள் கைப் பொருளே / Kalaimagal kaiporule

நாயகனோ பெருங்குடிமகன். (ஜமீன்தார்). நாயகியோ அவனிடம் பணிபுரிந்து தன் பெரிய குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவள். நாயகனின் மனிதநேயம் பற்றி அறிந்தவள் அவள் ஒருத்திதான். அவனைச் சுற்றியுள்ள அனைவரும் அவனின் வெளியே தெரியும் குறைகளை மட்டும் பார்க்கும் போது அவள் மட்டும் தான் அவன்  மனதிற்குள் இருக்கும் மனித நேயத்தையும் நிறையையும் கண்டுபிடித்தவள். தாய் அன்புக்காக ஏங்கும் குழந்தை மனத்தையும் அறிந்தவள் அவளே. அவன் குறைகளை களைந்து அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க வேண்டும் . பிறரின் அவச்சொல்லிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் அதன் வழியை அறியாத ஒரு கலக்கம். இதைச் செய்ய நமக்கு தகுதி உண்டா எனும் குழப்பம் . கலக்கமும் குழப்பமும் வரும்போது நாம் சரண் புகுவதே இறைவனின் பாதங்களைதானே. நமது நாயகியும் கோவிலுக்கு புகுந்தவள் தூசு படிந்து இருக்கும் வீணையைக்  கண்டு வீணையும் நாயகனும் ஒன்று தானோ என்று எண்ணிக் கலங்குகிறாள். அவள் மன போராட்டத்திற்கு மருந்தாகும் இசை  நமக்கு எல்லாம் விருந்தாகிறது. கான சரஸ்வதி     பி .சுசீலாவும் , கலைமகள் சரஸ்வதியும் இணைந்தால் இசை வெள்ளத்திற்கு ...

சொல்லத்தான் நினைக்கிறேன் / Sollathan Ninaikiren

உலகையே ஆட்டி வைக்கும் அந்த ஒற்றை மந்திரச்சொல் இவளையும் ஆட்டி வைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. "காதல் காதல் காதல்" என்று மனதிற்குள் சொல்லிப்பாருங்கள் சுகமாய் இனிக்கிறதா? இந்த நாயகி அப்படித்தான் சொல்கிறாள்.  ''சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது' இப்பொழுதெல்லாம் வாசல்படியில்  நிழல் ஆடுவதே இல்லை. எனவே வாட்ஸ் அப்பின் ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது என்று வரிகளை மாற்றிக் கொள்வோமா? "அந்தி வெயில் குளித்த சிறு மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே  அழ வைக்கிறாய் " என்று அழகாக நாயகி தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள் பர்த்டே பார்ட்டி முடிந்ததும் நாயகன் ஊதிய பலூன் எடுத்து நாயகி அவன் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் இடம் , அப்புறம் கோவிலில் நாயகனுக்கு தலையில்  சடாரி வைத்து எடுத்தவுடன் அடுத்ததாக ஓடிப்போய் இவர் தலையில் வாங்கிக் கொள்ளும் இடமும் அழகு. சினேகா அந்த சில்வர் கலர் டிரஸ்ஸில் செம அழகு.  பூவின் மேல் பாறையாய் உயிரை வதைக்கும் தனிமையை தாங...