மின்னலை பிடித்து மின்னலை பிடித்து/ Minnalai pidithu

இந்த கவிஞர்கள் பெண்களை வர்ணிக்க தொடங்கிவிட்டால் அவர்கள் கையில் உள்ள "பென்" களுக்கு கற்பனை சிறகு முளைத்து விடும் போல. பறந்து சென்று பிரம்ம லோகத்தில் நடப்பதை கூட பார்த்து வந்துவிடுகின்றன அவரது பேனாக்கள். 


கவிஞரின் பேனாவை கடன்வாங்கி இந்த நாயகன் எழுதும் கவிதையை பாருங்கள்.

கவிதை எழுதும்போது மென்மையாய் வருடும் இசை எழுதி முடித்ததும் அதிரும் இசையாகி அவனை விண்ணில் பறக்க வைக்கிறது. (மின்னலை பிடிக்கவோ?)  நம்மை தாளம் போட வைக்கிறது. விஜய் கியூட்டா இருக்கார். டான்ஸ் சூப்பரா இருக்கு.  இசை மணிஷர்மா. காதை உறுத்தாத இனிமையான இசை . முக்கியமாக இந்த இனிமையான பாடல் வரிகளை இசைக்குள்  அமிழ்த்தி விடாமல் வெளியே உலவவிட்டு இருப்பதற்கே அவருக்கு ஒரு கிரேட் சல்யூட்.

உன்னி மேனன் வாய்ஸ் அசத்தல்.



இதோ இந்த வரிகளை கேளுங்கள் வெறும் மின்னலைப் பிடித்து அவளை செய்தால் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்று மேகத்தில் துடைத்து பாலிஷ் பண்ணி அவளை படைத்தானாம் பிரம்மன். படைத்துவிட்டு பார்த்த பிரம்மனுக்கு தன்னிடம் இருக்கும் முழு கற்பனை சக்தியையும் செலவழித்து இவளைப் படைத்த விட்டோமே , இனி பெண்களை படைக்க , அவர்களுக்கு அழகு கொடுக்க நம்மிடம் கற்பனை சக்தி முழுதும் தீர்ந்துவிட்டதே!  என்ன செய்வது?  என்ற கலக்கத்தில் பிரம்மனே மூர்ச்சையுற்றுவிட்டாராம். 


பிரம்மனின் கற்பனை சக்தி பாதியை வைரமுத்து கடன் வாங்கி வந்துவிட்டாரோ என்று எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கிறது.  


"மின்னலை பிடித்து மின்னலை பிடித்து

மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து

வீதியில் விட்டு விட்டான்

இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க

தன்னிடம் கற்பனை தீர்ந்ததை

எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்"


அவளின் நாசிக்குள் நுழைந்த காற்றே மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகும்பொழுது 

அவளை நனைக்கும் மழைத்துளிகள் முத்துக்கள் ஆவதில் வியப்பேதுமில்லை

 

மழைத்துளிகள் முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே என்ற வரியில் விஜயின் பர்ஃபாமென்ஸ் அவரே முக்தி பெற்று விட்டதைப் போல் காட்டுகிறது. நைஸ்.


ஒரு லிட்டர் பாலை எடுத்து ஒரு கிண்ணம் நிலவொளியை கொட்டி

பிசைந்தால் இதோ இரண்டு கண்ணாடிக் கன்ங்கள் ரெடி.



"நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து

பாலில் நனைத்து பாலில் நனைத்து

கன்னங்கள் செய்து விட்டார்

உலக மலர்கள் பறித்து பறித்து

இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து

பெண்மை சமைத்து விட்டார்"


பிரம்மன் சமைத்த அழகு இருக்கட்டும், இந்த இடத்தில் வைரமுத்து கவிதை சமைத்த அழகை என்னவென்று சொல்வது? பிரம்மனையே மிஞ்சிவிட்டார் என்று தோன்றுகிறதல்லவா?


"அவள் " பெண்பாலில் அடங்கும் "அவன்"ஆண்பாலில் அடங்கும் என்று ஆசிரியர் பாடம் நடத்த "குழந்தை எந்த பாலில் அடங்கும் ?" என்று ஒரு குறும்பு சிறுவன் வினவ , "குழந்தை தாய்ப் பாலில் அடங்கும்"  என்று ஒரு குட்டி சிறுவன் , திகைத்த ஆசிரியருக்கு கை கொடுத்தானாம். அந்த குட்டி சிறுவன்தான் இப்பொழுது நமக்கெல்லாம் இப்படி குறும்பு கவிதைகளை எழுதி அள்ளி வழங்கும் வைரமுத்து. 


"அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா

என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து

அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா"

இந்த வரிகளை எழுதும்போது அந்த ஞாபகம் வந்ததாக வைரமுத்து ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.


"எங்கெங்கு நோக்கினும் சக்தியடா " என்று பாரதியார் சொன்னது போல் இந்த நாயகனுக்கு எங்கெங்கு நோக்கினும், ஏன் கவிதை கூட அந்த கன்னி வடிவமாகத் தெரிகிறது. 


மின்னல் பெண்ணுக்கு மின்மினிக் கண் பதித்தால் பார்ப்போர் கண்களை பறிப்பாளா மாட்டாளா? 


"மின்மினி பிடித்து மின்மினி பிடித்து

கண்களில் பதித்து கண்களில் பதித்து

கண்மணி கண் பறித்தாள்"


கன்னங்கள் ரெடி..  டாப்பிங்ஸ் பண்ண மறந்து விட்டோமே.  


ஒரு ஐந்தாறு ஸ்பூன் தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து கன்னத்தில் பூசினால் முடிந்தது. எ பர்ஃபெக்ட் கன்னம் ரெடி. 


வாவ். நாங்களும் சமைக்க கற்றுக் கொண்டோம்.


இப்படி பார்த்து பார்த்து செதுக்கிய அழகி உயிரற்ற அருகம் புல்லுக்கே ஆண்மை கொடுப்பவள், உயிருள்ள காவித் துறவிக்கும் ஆசை கொடுக்க மாட்டாளா?


பெண்கள் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பாள்.


இவர்களுக்கெல்லாம் கொடுத்து கொண்டே இருப்பவள் நாயகனுக்கு மட்டும் உயிரைக் கொடுத்துக் கொண்டும் , எடுத்துக் கொண்டும் இருக்கிறாள்.


"ஒஹோ தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட

மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட

ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே"


வைரமுத்துவின் வரிகள் வருடங்கள் கடந்து நிற்கும்.


இனிய பாடல் பார்த்து ரசியுங்கள்


https://youtu.be/LF_1_hy2wXU






Comments

  1. Supero super, migavum arumaiyaga illathu vimarsanam, by vinayaki

    ReplyDelete
  2. Wow arumai ,nalla rasanai ungaluku ❤❤

    ReplyDelete
  3. ஒவ்வொரு பாடலிலும் உங்கள் விமர்சனம் மெரு கே றிக் கொண்டே போகிறது Dheeksha. Keep it up.

    ReplyDelete
  4. பாடலை ரசிப்தா, பாடல் வரிகளை ரசிப்பதா, இசையைக் கேட்டு மகிழ்வதா அல்லது உங்களின் விமர்சனங்களை படித்து ரசிக்கவா !!!. மிக அழகான ஆழமான வர்ணனை வைரமுத்து கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இதை படித்ததும் பாடல் வரிகள், காட்சிகள், இசை அனைத்தும் கூடுதலாக ரசிக்க முடிகிறது. நன்றி ! . வாழ்த்துக்கள். Keep going.God bless.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "