"பூங்காத்து திரும்புமா "
காற்றின் அலைவரிசையில் பயணம் செய்யும் பாட்டை அந்தக் காற்றே விரும்பாவிட்டால் அந்த பாடகன் இதை யாரிடம் சொல்லி ஆறுதல் கொள்வான்? அந்த பூங்காற்றையே அழைத்துப்பாடுகிறான் "பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா. பாராட்ட மடியில் வைச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?" இந்த வரிகளின் போது ஒரு ஆடு தன் குட்டியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு சிவாஜியின் கண்களில் தெரியும் ஏக்கத்தை பார்க்கும் போது யாராக இருந்தாலும் தாயாக மாற எண்ணம் வரும். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தேடுவது ஒரு சிறு அங்கீகாரத்தை தான் .ஒரு சிறு மரியாதையை தான். சிறுமரியாதையை எதிர்பார்த்த அவருக்கு. " முதல் மரியாதை'' யே கிடைத்தால்?... ராசாவே வருத்தமா ?" என்றவுடன் வரும் சிறு பறவைகளின் ஒலிகள், ஜானகியின் குரலோடு போட்டி போடும் புல்லாங்குழல் இசை (இளைய) ராசாவே! இப்படி ஒரு பாடல் கிடைத்த ஆனந்தமா?) "ஆகாயம் சுருங்குமா ? ஏங்காதே ,அத ஒலகம் தாங்காதே ,அடுக்குமா ?சூரியன் கருக்குமா ? " எங்கிருந்தோ ஒரு ஆறுதல் குரல் ஒலிக்க சிவாஜி அதிர்ந்து பின் ஆனந்தித்து பாடல் வந்த வழி பயணம் போகிறார் அந்த குயில் மகளின் முக...