"சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் "


அவனோ காட்டு அருவி. அவளோ வீட்டுக் குருவி. கற்பனை சிறகு விரித்து வானில் பறக்க அவளுக்கு விடுக்கிறான் அழைப்பு. இருப்பினும் மனதுக்குள் பதைப்பு. இல்லை என்று சொல்லி விடுவாளோ?
"இல்லை ,இல்லை சொல்ல ஒரு கணம் போதும், இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும். என்ன சொல்ல போகிறாய்? என்ன சொல்ல போகிறாய்?" என்று பாடலைத்  தொடங்குகிறார் அஜீத்.  அந்த ஃபிரேமில் அஜித்தை பாருங்கள். ச்சோ ஸ்வீட். வாவ்! மேஜிக்கல் எக்ஸ்பிரஷன் அஜீத் சார் !
இந்நேரம் பாடலின் படத்தை “ கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்” என்று துள்ளி க் குதித்து இருப்பீர்கள்.

அடுத்து தகிக்கும் பாலையில் ,  தண்டவாளப்  பாதையில்  அஜித் நடந்து வரும் போது  பின்னணியில் ஒலிக்கும் இசையை கேட்கும் போது, நாம் திடும் என வழுக்கி இசை எனும் பள்ளத்தாக்கில்தட தட வென நழுவி நழுவி கீழே, கீழே சென்று கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறதா  இல்லையா?
அப்புறம் அஜித் மயங்கிக்கிடக்கும் இடத்தில் வரும் அந்த (புல்லாங்குழல் ) இசையையும் கேளுங்கள்.  
வாவ் ! மேஜிக்கல் மியூசிக் ரஹ்மான் சார் ! 

அடுத்த வரியில் "அன்பே எந்தன் காதல் சொல்ல நொடிஒன்று போதுமே, அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே" என்கிறார்.
இதயத்தில் விழுந்த கண்ணாடி பிம்பம் கட்ட கயிறு தேடுகிறான் இந்த காளை. "கண்ணாடி பிம்பம் கட்ட கயிறு ஒன்றும் இல்லையடி , கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி" வாவ் ! என்னே ஒரு கற்பனை.
வாவ் ! மேஜிக்கல் லிரிக்ஸ் , வைரமுத்து சார். ஹாட்ஸ் ஆஃப் !

தகிக்கும் காதலுக்கு நியாயம் கேட்க, தகிக்கும் பாலைவன லொகேஷன், அப்புறம் அந்த மிரட்டும் பிரமிட்ஸ்வாவ் ! மேஜிக்கல் டைரக் ஷன் ராஜிவ் மேனன் சார். ஹாட்ஸ் ஆஃப் !

“என்ன சொல்ல போகிறாய் ,என்ன சொல்ல போகிறாய்?” என்று ஹை பிட்ச்சில்  கதறும் குரல் இந்த பாடலுக்கு மேலும் பலம்.. பாடகருக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல் இதுவாவ் ! மேஜிக்கல் வாய்ஸ் , ஷங்கர் மஹாதேவன் சார்,    ஹாட்ஸ் ஆஃப் !

அந்த பஞ்சாபி காஸ்ட்யூமும் அதற்கேற்ற டான்ஸ் மூவ்மென்ட்ஸும் ஆஹா. அதிலும் தபுவின்  கலர்ஃபுல் காஸ்ட்யூம் லவ்லி !
படத்தில் ஒரு  உலக அழகியை  வைத்துக் கொண்டே," பல உலக அழகிகள் கூடி, உன் பாதம் கழுவலாம் வாடி"  என்ற வரிகளை  வைத்த டைரக்டர், மற்றும் படலாசிரியரின் குறும்பான தைரியத்தை ரசிக்கலாம்.
இந்த பாடலைப் பற்றி நான் இன்னும் "என்ன சொல்ல போகிறேன்? என்ன சொல்ல போகிறேன்?"

It’s a magical song.

Please feel the Magic !


Comments

  1. வாவ்! மேஜிக் கல் வர்ணனை. ஹேட்ஸ் ஆஃப் Dheeksha

    ReplyDelete
  2. "தகிக்கும் பாலையில் , தண்டவாளப் பாதையில் அஜித் நடந்து வரும் போது பின்னணியில் ஒலிக்கும் இசையை கேட்கும் போது, நாம் திடும் என வழுக்கி இசை எனும் பள்ளத்தாக்கில், தட தட வென நழுவி நழுவி கீழே, கீழே சென்று கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறதா இல்லையா".

    என்ன ஒரு வர்ணனை♥️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "