"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்"

அவளோ பூவோடு பிறந்தவள். அவனோ பூகம்பத்திற்கு பிறந்தவன். சலசலக்கும் சிற்றோடையாய் அவள். சண்டமாருதமாய் அவன். வேள்வித் தீயில் இருந்து வெளிப்பட்டது போல் வேண்டுகோள்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறான் அவன்.அதை வெண் சாமரம் வீசுவது போல் அவள் பாடினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நிறுத்தச் சொல்லி பாடத் தொடங்குகிறான் அவன். 
அவன் கேட்பவை அனைத்தும் மிகவும் சாதாரணமாக தெரியும் ஆனால் மிகவும் அரிதாகவே கிடைக்கும் விஷயங்கள். 
சத்தம் இல்லாத தனிமையும், யுத்தம் இல்லாத உலகமும் ரத்தத்தில் என்றென்றும்வேகமும்,ரகசியமில்லா உள்ளமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவை தான். வலிகள் செய்யாத வார்த்தை கள் பாசாங்கு இல்லாத பாசம் நன்றி கெடாத நட்பு நடுங்க விடாத செல்வம் மூடியில்லாத முகங்கள் இவை வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா.
அவன் கேட்டவை அனைத்தும் வாழ்நாளில் என்றேனும் ஒரு நாள் நாமும் கேட்டவை தான். 
நடந்து போக நதிக்கரை , கிடந்து உருளப் புல்வெளி தொட்டுப் படுக்க நிலவு, எட்டிப் பிடிக்க விண்மீன் , பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்கும் கவிஞன் அவன்.
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம், உலகுக்கெல்லாம் சம மழை, ஊருக்கெல்லாம்  ஒரு நதி இப்படி தனித்துவமான வேண்டுதல்கள் கொண்ட சமத்துவ வாதி அவன்.
"இராஜராஜனின் வாளைக்கேட்டேன். வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்" என்கிறான் அவன். இதைக் கேட்டு எனக்கும் ராஜராஜனின் வாளைக் தொட்டுப் பார்க்கும் ஆசை வருகிறது. பாரதியாரின் கையெழுத்துப் பிரதி கன்னிமரா லைப்ரரி அருங்காட்சியகத்தில் உள்ளது விருப்பமுள்ளவர்கள்  லாக் டவுன் முடிந்ததும் சென்று பார்க்கவும்.
அஜித் ஷாலினியின் காதல் அமர்க்களமாய் அரங்கேறியது இந்தப் படப்பிடிப்பில் தான். கியூட் கப்பிள். எஸ்பிபி யின் மூச்சு விடாமல் பாடும் அந்த வேகத்திற்கு அஜித்தின் நடிப்பு ஈடு கொடுத்தது.
பரத்வாஜ் இசை. வைரமுத்துவின் வரிகள்  அழகோ அழகு. நான் எழுதிய வரிகள் கொஞ்சம், எழுதா வரிகள் நிறைய முழுதாய் கேட்டு ரசியுங்கள்.


https://youtu.be/MDGNtuWu-8U

Comments

  1. ஒவவொரு பாடலும் உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு மீண்டும் புதிதாய் பிறந்தது போல் உள்ளது.

    ReplyDelete
  2. உங்களைப்போல், பாடல்களை வரிவரியாக ரசித்துப் பார்த்தோமானால் சத்தம் இல்லாத தனிமையும், யுத்தம் இல்லாத உலகமும் ஒருநாள் கட்டாயம் கிடைக்கக்கூடும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "