"சிநேகிதனே, சிநேகிதனே, ரகசிய சிநேகிதனே"
சிநேகிதிக்கான பாடல்கள் பல இருக்கும் போது சிநேகிதனுக்கான பாடல்கள் சில தான் உள்ளது. அவற்றுள் இந்த ரகசிய சிநேகிதனுக்கான பாடல் ரொம்பவே ஸ்பெஷல். பக்கத்து வீட்டு பெண் ஃ பீல் கொடுக்கும் ஷாலினி. பெரிய இடத்து பையன் ஃபீல் கொடுக்கும் மாதவன். ரொம்ப அழகான ஜோடி. அதிலும் குட்டியா க்யூட்டா,துறு துறுன்னு இருக்கும் ஷாலினியை எனக்கு மிகவும் பிடிக்கும். Short girls are Sweet, you know?. அவங்க Free ஹேர் ஸ்டைல் , டீசென்ட் டிரஸ் மேக்கிங், Beautiful .ஷாலினியின் கடைசி படம் இது. அதன் பிறகு அவரின் ரகசிய சிநேகிதன் அஜீத்தை , காதல் கணவனாக கரம் பிடித்தார். வாழ்க வளமுடன் ! மாதவனை பார்த்து “மேடி” “மேடி” என்று மேட் (Mad) ஆகித் திரிந்த இளம் பெண்கள் எத்தனை பேர். மாதவனின் முதல் படம் இது ! சிநேகிதனாய் ஒரு கணவன் கிடைத்து விட்டால், அந்த பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான்.
"சிநேகிதனே, சிநேகிதனே, ரகசிய சிநேகிதனே" என்று சாதனா ஸர்கம் தன் இனியக் குரலில் பாடலைத் தொடங்கும் போதே எல்லோர் மனமும் “அலை பாயுதே” . A.R.Rahman அற்புதமான இசையில் மணிரத்னம் இயக்கத்தில் மற்றும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் இது. இனி ஷாலினி தனது ரகசிய சிநேகிதனுக்கு விடுக்கும் கோரிக்கைகளுக்கு நாமும் கொஞ்சம் செவிமடுப்போம். வைரமுத்து அவர்களின் வரிகள். ஒரு பெண்ணின் மனதிற்குள் புகுந்து எப்படி இவ்வளவு. ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தார் என்று ஆச்சரியப் பட வைக்கிறார். “பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்" இந்த வரியைக் கேட்கும் போது நம் கண்களுக்குள் எப்படி ஒரு அழகான கற்பனை காட்சி விரிகிறது. நாயகன் ஒரு பக்தனின் பக்தியோடு நாயகியின் விரல் நகத்தை வெட்டும் காட்சி.அதிலும் அவள் தூங்கும் போது. அவள் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்ற கவனத்தோடு. அப்ப அவன் எவ்வளவு மென்மையாக வெட்ட வேண்டும். அடுத்த வரி “ ஐ விரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவைகள் செய்ய வேண்டும்." இந்த இடத்தில் ஷாலினி ஒரு "கெத்"தான லுக் கொடுப்பார் பாருங்கள். சூப்பர்.
நாயகனோ அழுது கொண்டிருக்கிறான். அவன் அழும் போது பார்த்துக் கொண்டிருக்குமா பெண் மனது.அவனைப் பார்த்து அவளும் அழுகிறாள். அதைத் தாங்காத அவன் தன் சோகம் மறந்து,தன் கண்ணீரைத் துடைக்க மறந்து அவளின் கண்ணீரைத் துடைத்து விடுகிறான். என்ன ஒரு காதல். இந்த வரிகளைக் கேளுங்கள். "நீ அழும் போது , நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்." என்ன ஒரு எதிர்பார்ப்பு நாயகிக்கு. காதலர்களுக்காக ஒரு சட்ட புத்தகம் இயற்றினால், முதல் சட்டமாக LPC (Lovers Penal Code) Sec.1 ஆக இயற்றப் பட வேண்டிய வரி இது. Sec.2, 3 க்கு முதல் இரண்டு வரிகளை போட்டுக் கொள்வோம்.
இது வரை அவன் அவளுக்கு செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்ட அவள் இனி அவள் அவனுக்கு செய்யப் போவதையும் வரிசைப்படுத்துகிறாள். காதல் என்பது பெறுவது மட்டுமல்ல. தருவதும் தானே.
"உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் , நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்"
"உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன், வெளி வரும் பொது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்" என்ன அழகான வரிகள்.
இருளும் ஒளியும் கலந்து விரியும் காட்சிகள், பின்னணியில் வரும் அந்த மொஹல் Style building அனைத்தும் Wonderful.
A Beautiful Melody!
கண்டு கேட்டு ரசியுங்கள்.
Viewers, You can post your comments below to encourage me , to correct me.
உங்கள் விமர்சனங்களைப் படித்து படித்து நான் உங்களுக்கு ரகசிய ... இல்லை . இல்லை. பகிரங்க சிநேகிதி ஆகி விட்டேன் Dheeksha.
ReplyDeleteI am SARAVANAN your described words are very beautiful madam
ReplyDelete♥️♥️♥️
ReplyDelete