Posts

Showing posts from November, 2020

பொன்மாலை பொழுது

Image
  ஒரு  பொன்மாலை பொழு தி ல்,   வைரமுத்துவுக்கு திரையுலகம் வாசல் திறந்து, வாரியணைத்துக் கொண்ட பாடல் . வைரமுத்து, எஸ்பிபி ,இளையராஜா, பாரதிராஜா என்ற வெற்றிக்கூட்டணி "ஹே ஹோ ஹோ லல்லல்லா" என்ற எஸ்பிபி தொடங்கும்போதே நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது இல்லையா.  சூரியன் மறையும் அந்தி வேளையில் வானம் கொள்ளும் சிவப்பு நிறத்தை நானும் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் எவ்வளவு அழகான வர்ணஜாலம் என்று. நமக்கு கற்பனை அதைத்தாண்டி செல்லவே மாட்டேன் என்கிறது. ஆனால் வைரமுத்துவுக்கோ அது வான மகளின் நாணச் சிவப்பாக தெரிகிறது.  உலகமே பார்க்க வெளிர் நீல உடை நெகழ்த்தி, கரு நீல உடை உடுத்தும் வானமகள் நாணாமல் என்ன செய்வாள்? பாவம் பெண்ணல்லவா? அவளின் அந்த வெட்கச் சிவப்பை கவிஞர்கள் கண்டு சொன்னால்தான் உண்டு. அதனால் என்ன, அவர்கள் சொன்ன  பிறகாவது   ரசித்து கொள்வோம். வைரமுத்துவின் வர்ணனை வரிகளையும், SPB யின் குரலையும் கேட்டுத்தான் வானமகள் நாணுகிறாளோ என்றும் ஒரு சந்தேகம் எனக்கு. "இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்" இரவின் நிலவொளி மரங்களின் வழியே நுழை...

என்னை என்ன செய்தாய் வேங்குழலே

Image
 நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த கண்ணன் கைக்குழலுக்கும், காதல் கன்னியருக்கும் அப்படி என்ன ஒரு பகையோ தெரியவில்லையே? இந்த சௌந்தர்ய நாயகி குழலைப் பார்த்து கேட்கும் கேள்வியை நீங்களும் கேளுங்கள்.  "என்னை என்ன செய்தாய் வேங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே….. நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இள மனம் இளகிடவே என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏ…ஏ….. " சௌந்தர்யா செம அழகு இந்த பாட்டில்.  பாடலின் தொடக்க ஆலாபனையில் குளோசப்பில் காட்டும் அவர் முகம்,  கூந்தலில் சூடிய மல்லிகைச்சரம் , நீண்ட நெற்றி திலகம் , சேலைத் தலைப்பை        தோளை சுற்றி போர்த்திக் கொள்ளும் பாந்தம் அருமை.  வேள்வியின் விளைவென்பது தன்னை அறிதல். அந்த இன்பத்தை உணர்தல்.  என்றும் இசை வேள்வி நடத்தி , நல்லின்பம் படைத்த நாயகி தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்  "வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்." "எய்தவன் இருக்க அம்பை நோவது  ஏன் ?" என்று உணர்ந்த நாயகி இப்பொழுதுதான் எய்தவனை பற்றி...