கண்ணான கண்ணே /Kannana Kanne
ஒவ்வொரு தந்தைக்கும் தன் குழந்தை அதுவும் பெண் குழந்தை இளவரசி தான். தேவதைதான். தேவதைகளிடம் கேட்க ஆயிரம் வரங்கள் இருக்கும், தேவதைகள் பற்றியக் கனவுகளும் ஆயிரம் இருக்கும். "கண்ணான கண்ணே கண்ணான கண்ணே " என்று சித் ஸ்ரீராம் தொடங்கும் முதல் வரியே இது குரலா, இல்லை குழலா என்று நம்மை மயங்க வைக்கிறார். என்ன இனிமை. கண்ணே, மணியே என்று அழைப்பதை விட "கண்ணான கண்ணே " என்ற அழைப்பில் என்ன ஒரு அழகு ததும்புகிறது. அவளின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காக ஏங்கி கிடக்கும் தந்தை, அவளின் கோபம் தாளாமல் அஜித்தின் கண்கள் கண்ணீர் பொழிய , அதை தாளாத வானமும் மழைநீர் பொழிய தன் கண்ணீரை மழைநீரில் மறைக்க காரை விட்டு இறங்குகிறார் அஜித். தன் தேவதை குழந்தையிடம் அவர் கேட்கும் வரங்கள் இப்படி நீள்கிறது "கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா" அப்பா என்று தெரியாமலே அந்த பெண் குழந்தை அஜித்துடன் கொண்டாடும் பாசம் , அந்த மழைக் காட்சி , அப்புறம் ...