நிற்பதுவே நடப்பதுவே
பாரதியாரை ரசிக்கும் போதெல்லாம் நாம் தமிழையும் ரசிக்கலாம், தமிழைக்கொண்டாடும் போதெல்லாம் நாம் பாரதியாரையும் கொண்டாடலாம். "வாழ்வே மாயம் " இந்த ஒற்றை வரியை எத்தனை எத்தனை வார்த்தைகளால் சொல்ல முடியும். எவ்வளவு அழகான சொல் சித்திரமாய் நம் கண்முன் வடித்திருக்கிறார் பாரதியார். இதில் பாரதியாரின் புலமையை வியப்பதா? இல்லை தமிழின் சொல் வளத்தை வியப்பதா? நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன எல்லாம் கனவா ? தோற்ற மயக்கங்களா? "தோற்ற மயக்கம்" பாரதியின் இந்த சொல்லாடல் ஒரு இன்ப மயக்கத்திற்குள் நமை ஆழ்த்தி ஒரு தள்ளாடல் தருகிறது. "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொற்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ நான் கற்றதும் , பெற்றதும் , பெற்றதாய் நான் எண்ணும் ஞானமும் எல்லாம் அற்ப மாயைகளோ ? அவற்றில் எந்த பொருளும் இல்லையா? "கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ" என்று தன் ஞானத்தையே ஒரு தராசு தட்டில் ஏந்தி சீர் தூக்கிப் பார்க்கும் வல்லமையை அந்த பராசக்தியை தவிர வேறு ...