Posts

Showing posts from August, 2020

கப்பலேறிப் போயாச்சு

Image
  நம்மில் பாதிப்பேர் சுதந்திரம் கிடைத்தபோது பிறந்து இருக்கவே மாட்டோம் .  இந்த சுதந்திர குழந்தையை பெற்றெடுக்க பாரதத்தாய் இழந்தவை எத்தனை? எத்தனை கண்ணீர்? எத்தனை செந்நீர்? எத்தனை வலிகள்? எத்தனை பலிகள்? அத்தனைக்கு பிறகு  அந்தக் குழந்தையை கையில் ஏந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் தான் எத்தனை எத்தனை? அந்த சுதந்திம் பெற்ற கணத்தை , அந்த ஆனந்தத்தை நாம் அனுபவித்தால் எப்படி இருக்கும்?  ஒரு டைம் மெஷினில் ஏறி அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு 1947 ஆகஸ்ட் 15 அன்றைக்கு செல்வோமா? இப்போ ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை?ஓ கே . ஒரு சிம்பிளான விஷயம் சொல்கிறேன் இந்த பாட்டை பாருங்கள். எஞ்சாய் தட் மொமென்ட். முதலில் அந்த ப்ளூட் இசை. எனக்கு ஒரு சந்தேகம் இந்த புல்லாங்குழல் இசை மட்டும் பாரெங்கும் ஒரு பரவச காதல் உணர்வை பரவ விட்டு விடுகிறதே எப்படி என்று?  அது காதல் கண்ணனின் கைக்குழலாக இருப்பதாலோ? பிறகு வரும் கோரஸ் ஒலி கேட்கும் போது உங்களுக்குள் ஒரு " ஜோஷ்" கண்டிப்பாக உருவாகும். ஜோஷ் சரியான தமிழ் அர்த்தம் ஆவேசம். மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் கேட்கவா வேண்டும்?  "கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச...

சின்னத் தாயவள்

Image
தாய்மை என்பது வரம் இதுவே உலக வழக்கு. ஆனால் அந்த தாய்மையே சாபம் ஆனால் இவள் எங்கு தொடுப்பாள் வழக்கு. அந்தக் கன்னித் தாய் குந்தி பெற்றெடுத்த குழந்தை பார்போற்றும் கர்ணன். இந்த கண்ணீர் தாய் பெற்றெடுத்த குழந்தை ஊர் போற்றும் நம் நாயகன்  ஒரு கயவனின் கிறுக்களில் விளைந்த கவிதைக்  குழந்தை அவன். அதனால் கவிதை ருசிக்காமல் போய்விடுமா என்ன? பத்து மாதம் சுமந்த பந்தம் நினைக்காமல் போய்விடுமா? பிறந்தவுடன் பிரிந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் நினைவை  நெஞ்சில் சுமந்து  கண்களில் கண்ணீர்  சுமந்து அலையும் அபலைத் தாய் இவள். ஒருமுறை கூட தாயின் திருமுகம் காணாத அதிர்ஷ்டம் இல்லா மகன் இவன். தன் தாய் இவள்தான் என்று தெரிந்த பின் மறைந்திருந்தாவது அவள் மலர் முகத்தை காணத் தவிக்கும் மகனாக ரஜினியின் நடிப்பு அப்பப்பா என்ன பெர்ஃபார்மன்ஸ். ஃபர்ஸ்ட் கிளாஸ்.   பாடல் தொடங்கும் முன் வரும் மனதை பிழியும் இசை அதைத் தொடர்ந்து வரும் ஜானகியின் இதயம் பிசையும் குரல். ஜானகி தன் பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே இந்த பாடலை பாடி இருப்பாரோ என்று நினைக்க வைக்கும் குரல்..  ஒரு குழந்தைக்கு தாயான போது அ...