ஒரு பொய்யாவது சொல் கண்ணே "
உலகத்தில் மனிதர்கள் இரண்டே பிரிவினர். ஒரு பிரிவினர் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் . இன்னொரு பிரிவினர் காதலிக்க ( கிடைக்காதா என்று ஏங்கிக்) காத்துக் கொண்டிருப்பார்கள் . காதலே இல்லாதவர்கள் மனித ஜாதி அல்ல ,அல்ல ,அல்ல. அதையும் தாண்டியவர்கள்.
பொய் சொல்லக்கூடாது காதலி என்கிறான் ஒருவன் . "ஒரு பொய்யாவது சொல் கண்ணே " என்கிறான் இவன்.
நீ காதலிக்கவில்லை என்ற உண்மையோடு வாழ்வதைவிட நீ காதலிக்கிறாய் என்ற பொய்யோடு வாழ்வது சுலபம் என்கிறான் இவன். ஏனென்றால் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தானே.
பாடகர் ஹரிஹரன் தன் உருகும் குரலால் , பிரசாந்த் ,சிம்ரன், ரமேஷ் அரவிந்த் அனைவரையம் பின்னுக்குத்தள்ளி முன்னே நிற்கிறார். வைரமுத்துவின் வரிகளும், ஏ. ஆர் .ரகுமானின் இசையும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன.
பெண்களை வர்ணிக்க தொடங்கிவிட்டால் இந்த கவிஞர்கள் கற்பனை எல்லை மீறி பறக்கிறது.
இரவு வானின் அழகையெல்லாம் இரவல் வாங்கி அந்த இறைவன் என் இதய தேவதையை படைத்துவிட்டான் என்று இந்த இளைஞன் வர்ணிக்கின்றான் .இவன் வர்ணிப்பதை கொஞ்சம் கேளுங்கள்.
கருங்கூந்தல் இரவினை ஒத்திருக்கிறது, கண்களோ நிலவினை ஒத்திருக்கிறது,
விரல் நகங்கள் விண்மீன்களாய் ஒளி விடுகின்றன , கைரேகைகள் மின்னலாய் கண்கூச செய்கின்றன என்கிறான் இவன்.
" இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ ?
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ ?
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ?
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ." வைரமுத்துவின் கற்பனை இனிமை.
பூக்களின் சத்தத்தையும் மௌனத்தின் யுத்தத்தையும் தாங்க முடியாத இவன் கல்லால் செய்த காதலியின் இதயத்தை மட்டும் எப்படி தாங்குவான்?
தன் காதலன் எழுதிய பாட்டை மணமேடையில் பாடகன் ஒருவன் பாட கேட்கையில் அந்தப் பெண்ணும்தான் எப்படி தங்குவாள் ? அதுவும் அந்த காதலனும் பார்வையாளனாக நின்று கேட்டுக் கொண்டிருந்தால்….
இப்படி கவிதையாய் வர்ணித்துக் கொண்டிருந்தால் கல்யாணம் பண்ணிக்கொள்ள அம்பானியே காத்திருந்தால் கூட " எனக்கு அம்பானி வேண்டாம், அன்பே நீ போதும் '' என்று மணப்பெண் ஓடிவந்து விடமாட்டாளா ? இதை படித்துவிட்டு அன்பர்கள் யாரும் வம்பர்களாக மாறி திருமண மண்டபத்தில் இதை முயற்சி செய்தால் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
இன்னும் கொஞ்சம் கவிதை கேட்டு ரசிக்கலாம் என்பதற்குள் ஓ! சிம்ரன் மண மேடையை விட்டு இறங்கி ஓடி வந்துவிட்டார். வைரமுத்துவின் வைர வரிகளை கேட்டு ரசியுங்கள் . பாடலை பார்த்து ரசியுங்கள். ஹரிஹரனின் அந்தக் கடைசி ஒரு சொல், ஒரு ஒரு சொல் ,ஒரு ஒரு ஒரு சொல் , ஆகா உருக்குகிறது.
https://youtu.be/whmG9N2zsYc
அந்த ஒரு சொல் - சூப்பர் song.
ReplyDelete*பாட்டு மெட்டுகேட்டு தாலாட்டும் தென்றல் உங்கள் வரிகளில் அருமை*
ReplyDeleteஅன்பே அனைத்தும் என்றால் நாளை நமதே! இதற்க்கு *நாமே தீர்வு*
என்றும் அன்புடன்,
மா பெ சா பிள்ளை