"நலம்தானா? நலம்தானா?""


இன்று நாம் சுவைக்கவிருப்பது சிவாஜி கணேசனின்  பாடல் ஒன்று. சிவனுக்கு பின் (சிவாஜி) கணேசன் வருவது தானே  முறை. கண்ணதாசனின் வரிகள் பி.சுசிலாவின் தேன் குரலில் கே.வி .மஹாதேவன் இசையில்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலம்தானா பாடல். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத பாடல். பத்மினியின் நடனமும், நாதஸ்வரம் வாசித்துக் கொண்டே நவரசங்களையும் பத்மினிக்கு இணையாக ஏன் மேலாக என்று கூட சொல்லலாம் ,முக பாவத்திலேயே காட்டும் சிவாஜியின் நடிப்பும். அட அட அட. பாடலின் தொடக்கத்திலேயே  பத்மினி சிவாஜியிடம் ஓடி வந்து நலம்தானா,நலம்தானா  என்று சைகையில் விசாரிக்கவும், ஒற்றை கண் சிமிட்டலில் அவருக்கு சிவாஜி ஆறுதல் தரும் அழகும்  காணக் கண் கோடி வேண்டாமோ."கண் பட்டதால் உந்தன் மேனியிலே  புண் பட்டதோ அதை நானறியேன். புண் பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்" என்ற வரியில் பத்மினியின் துடிப்பை கண்டதும் சிவாஜியின் கண்களில் வழிவது ஆனந்த கண்ணீர் அல்ல. அது காதல், காதல் பெருமிதம்.  தனக்காக இப்படி ஒரு பெண் உருகும் போது  அந்த பெருமிதச் சுவையை சிவாஜியைத் தவிர வேறு யாரால் இவ்வளவு அழகாக வெளிப்படுத்த முடியும்? அப்புறம் பத்மினியை பற்றி என்ன சொல்ல. அவரோ நாட்டிய பேரொளி. அவரின் அழகும் ,நடனமும், நளினமும் பார்ப்போர் கண்களை கூச வைக்கும் பேரொளி. பார்த்து /கேட்டு ரசியுங்கள் "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் வரும் "நலம்தானா?" பாடல்.    

https://www.youtube.com/watch?v=T93njWVO48s

Comments

  1. பாடல் நேரில் பார்ப்பது போலவே வுள்ளது.

    ReplyDelete
  2. என் கண்ணுல கூட ஆனந்த கண்ணீர் வருகிறது.

    ReplyDelete
  3. எல்லாம் சரி, பாடல் எங்கே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "