"பூங்காத்து திரும்புமா "
காற்றின் அலைவரிசையில் பயணம் செய்யும் பாட்டை அந்தக் காற்றே விரும்பாவிட்டால் அந்த பாடகன் இதை யாரிடம் சொல்லி ஆறுதல் கொள்வான்? அந்த பூங்காற்றையே அழைத்துப்பாடுகிறான் "பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா. பாராட்ட மடியில் வைச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?" இந்த வரிகளின் போது ஒரு ஆடு தன் குட்டியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு சிவாஜியின் கண்களில் தெரியும் ஏக்கத்தை பார்க்கும் போது யாராக இருந்தாலும் தாயாக மாற எண்ணம் வரும். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தேடுவது ஒரு சிறு அங்கீகாரத்தை தான் .ஒரு சிறு மரியாதையை தான். சிறுமரியாதையை எதிர்பார்த்த அவருக்கு. " முதல் மரியாதை'' யே கிடைத்தால்?... ராசாவே வருத்தமா ?" என்றவுடன் வரும் சிறு பறவைகளின் ஒலிகள், ஜானகியின் குரலோடு போட்டி போடும் புல்லாங்குழல் இசை (இளைய) ராசாவே! இப்படி ஒரு பாடல் கிடைத்த ஆனந்தமா?) "ஆகாயம் சுருங்குமா ? ஏங்காதே ,அத ஒலகம் தாங்காதே ,அடுக்குமா ?சூரியன் கருக்குமா ? " எங்கிருந்தோ ஒரு ஆறுதல் குரல் ஒலிக்க சிவாஜி அதிர்ந்து பின் ஆனந்தித்து பாடல் வந்த வழி பயணம் போகிறார் அந்த குயில் மகளின் முக தரிசனத்திற்காக. இந்த இடத்தில் ராதாவின் முகபாவனைகள் சிவாஜிக்கு சரியான போட்டியாக இருக்கும். இது ராதாவுக்கு வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத படம்.ராதாவை யாரும் மறக்க முடியாத படம். மெத்தை வாங்கியும் தூக்கத்தை வாங்க முடியாத வேதனை யாருக்குத்தான் இல்லை. (இந்த வரிகளில் பலநாள் தூங்காத பாவத்தைக் காட்டும் சிவாஜியின் கண்கள்) ஏதோ அவர் பாட்டுக்கு ஒரு பாட்டு பாடி சொல்லாத சோகத்தைச் சொல்ல அந்த சோக ராகத்தை சுக ராகமாக மாற்றிக்காட்டிய மாயக்காரி அவள். குரல் கொடுத்த அவள் முகம் கொடுக்க மறுக்கிறாள். வார்த்தையில் ஆறுதல் கொடுத்த அவளால் வாழ்க்கையில் ஆறுதல் கொடுக்க முடியாது என்று எண்ணி முகம் காட்ட மறுக்கிறாளோ? உள்ளே அழுது வெளியே சிரிக்கும் அவரின் நிலை எண்ணிக் கலங்குகிறாள் அவள். "இந்த வேஷம் தான் கொஞ்சம் மாறனும் ,எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்" என்று அந்த சாமிக்கு மகுடம் சூட்ட ஆசைப்படும் அவள் கடைசியில் "கொஞ்சம் பாருங்க, பெண் குயில் நானுங்க" என்று கூறி முகம் காட்டுகிறாள். அப்பொழுது படகிலிருந்து இறங்கி படகை கட்டிவிட்டு நிமிர்ந்து ராதா சிவாஜியை பார்க்கும் காட்சியில் ஓர் ஓவிய அழகு தெரியும். "அடி நீதானா அந்தக் குயில் ? தானாக வந்த குயில்? " அந்த நேரத்தில் சிவாஜியின் முகத்தில் தெரியும் பரவசம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது . பதிலுக்கு ராதா காட்டும் ரியாக்ஷன் இயல்பான நடிப்பு. பிரமிக்க வைக்கிறார். "ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி பறந்ததே ,உலகமே மறந்ததே " எனும்போது நம் மனதிற்குள்ளும் காத்தாடி பறக்கிறது . பச்சை பசேல் காட்சிகள் அனைத்தும் ஏ.சி. யின் ஜிலீர். பாதிராஜாவின் டைரக்சனில் வைரமுத்துவின் வரிகளில், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் மறக்க முடியாத பாடல்.
கேட்டும், பார்த்தும் மகிழுங்கள்.
https://youtu.be/cmD8hKHUz5E
Ethanai murai parthalum salikkatha padal
ReplyDeleteVimarsanam miga miga arumai
முதல் மரியாதை மட்டும் நான் நடிக்கலேன்னா என்னை தமிழ் பட உலகமே மறந்திரு க்கும் என்று சொல்லி ராதாவே பெருமை பட்ட பாடல். குயில் ஆகவே மாறி சிவாஜியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். சிவாஜிக்கு முதல் மரியாதை தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரம். Super Vimarsanam Dheeksha.
ReplyDeleteவிமர்சனத்தை படிக்கும் போதே பாடலை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். Very very well done ♥️
ReplyDeleteஉங்கள், பாடலுக்கான விமர்சனத்தில், படத்தையே ஒருமுறை மனதிற்குள் ஓட்டிப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.மிகச்சிறப்பான விமர்சனம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteSuper
ReplyDeleteNice
ReplyDelete