தென்றல் வந்து தீண்டும் போது
கருப்பு வெள்ளை கண்களை கொண்டே நாம் வண்ணவண்ண காட்சிகள் காணுகின்றோம்.ஆனால் கருப்பு-வெள்ளை காட்சிகளை மட்டும் காட்டும் கண்களைக் கொண்ட ஒரு வஞ்சிக்கப்பட்ட வஞ்சிக்கு வண்ணங்களைப் பற்றி எடுத்துரைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? ஊமை கண்ட கனவை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? இந்த வினாக்களின் வெப்பத்தில் நான் தவித்துக் கொண்டிருந்த போது தென்றலாய் என்னை தீண்டி ஆற்றுப்படுத்த கவிஞர் வாலியும், இசை மழை பொழிந்து எனை குளிர்விக்க இசைஞானி இளையராஜாவும் கைகோர்த்தனர். இப்படிப்பட்ட கடினமான வினாக்களுக்கு விடை கொடுக்க கவிஞர்களையும், இசை கலைஞர்கள்களையும் தவிர வேறு யார் இருக்கிறார்கள் நமக்கு கைகொடுக்க . அந்தப் பேதைப் பெண்ணுக்கு புரிந்த எண்ணங்களாலேயே வண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கிறார் வாலி. அந்த அழகு கவிதையை நாம் அனைவரும் அள்ளிப் பருகுவோம். அவதாரம் படத்தில் நாசர் ரேவதி நடிப்பில் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல். தொடக்கத்திலேயே வண்ணக் கலவைகளால் வரையப்படும் பெண் ஓவியம் அழகுக் காட்சி. ஓவியம் வரைந்து முடித்ததும் கருப்பு வெள்ளை காட்சியாக மாறி பின் முழு கருமை வண்ணம ஸ்கிரீன் முழுதுவதும் ரேவதியின் பார்வையில் . பிறகு வண்ணக் காட்சிகள் நாசர் பார்வையில். சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்துப்பாருங்கள் தென்றல் வந்து தீண்டும் போது உங்கள் மனதில் என்ன வண்ணம் தோன்றுகிறது? திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணம் தோன்றுகிறது? "வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா, எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா"
பூவெல்லாம் வாசம் வீச , குயில் எல்லாம் தேனாய் பாட யார் சொல்ல வேண்டும்? இருமனம் ஏதோ பேச என்ன உறவு வேண்டும்?மனசெல்லாம் இனிப்பாய் இனிக்க என்ன காரணம் வேண்டும் ? ஏதோ ஒரு இனம் புரியாத உறவு, உணர்வு.
எவரும் சொல்லாமலே ஜானகி தேனாய் பாடவே, ராஜா இசையாலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குதே!
நீரோடை போல் காலம் ஓடும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையில் நினைவில் வரும் நிறங்களும் நிலையற்றதாக மாறிக்கொண்டே தானே இருக்கும்.
இடையில் வரும் இசையில் வரும் குழந்தைகள் கருப்பு வெள்ளை உடையில். குழந்தைகள் அனைவரும் வண்ண கலவையில் நனைத்து கைகளாலே ஒரு அசைவு. மெல்ல மெல்ல ரேவதிக்கு வண்ணங்கள் பற்றிய அறிவு. "ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது. நேசம் பொறந்தாலே உடம்பெல்லம் எனோ சிலிர்க்குது."
அவர்களின் புதிதாய் பிறந்த நேசத்தையும் ஆலம் விழுதாக ஊஞ்சல் ஆடும் ஆசைகளையும் "குயிலே குயிலினமே, அத இசையா கூவுதம்மா கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா " எவ்வளவு அழகான கற்பனை?
அவர்களின் ஆசைகள் ஊஞ்சல் ஆடையில் ,இளையராஜாவின் இசையில் நாமும் சேர்ந்து ஊஞ்சல் ஆடுகிறோம்.
அவர்களின் புதிதாய் பிறந்த நேசத்தையும் ஆலம் விழுதாக ஊஞ்சல் ஆடும் ஆசைகளையும் "குயிலே குயிலினமே, அத இசையா கூவுதம்மா கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா " எவ்வளவு அழகான கற்பனை?
அவர்களின் ஆசைகள் ஊஞ்சல் ஆடையில் ,இளையராஜாவின் இசையில் நாமும் சேர்ந்து ஊஞ்சல் ஆடுகிறோம்.
இறுதியில் கருப்பு வெள்ளை உடை குழந்தைகள் வண்ண உடை குழந்தைகளாக மாற ரேவதிக்கு வண்ணம் பற்றிய முழுமையான தெளிவு பிறக்கிறது. டைரக்ஷன் நாசர். அருமையோ அருமை. இளையராஜாவின் குரல் அப்படியே நாசர் பாடுவது போலவே உள்ளது. ரேவதியின் எக்ஸ்பிரஷன்ஸ் மிகவும் சிறப்பு.
காட்சிகள் இல்லாமல் காதால் கேட்கவே இந்த பாடல் இனிமையோ , இனிமை. (அதுவும் யாரும் இல்லா தனிமையில் ) ஹெட் போன் போட்டு கேட்டால் அருமையோ அருமை.
Evergreen Ilayaraja Song! Enjoy it !
Evergreen💚💚💚
ReplyDeleteநீங்கள் எழுதி இருக்கும் அனைத்தும் உண்மையோ உண்மை.
ReplyDeleteதங்களுடைய கற்பனை திறனோ அதிலும் அருமை. அதுவும் குறிப்பாக ஹீரோயின் பார்வையில் தங்களுடைய விளக்கம் அதிலும் அருமை அருமை.
ReplyDeleteஅருமையோ அருமை,இனிமையோ , இனிமை.
ReplyDeleteVAALI KARPANAI SEITHATHAI VIDA ITHU TOOOO MUCH. MIRCHI MASALA THAN PONGA. ADI THOOL MA.
ReplyDelete