"நாணிக் கோணி ராணி உந்தன் "
நான் வேறு ஒரு பாட்டிற்கு விமர்சனம் எழுதத் தொடங்கி விட்டு திடீரென்று இந்தப் பாட்டிற்கு எழுதக் காரணம் இந்தப் பாடலின் தமிழ் என்னை ஈர்த்தது. திரைப்பட பாடல்களில் பெரும்பாலும் செவிக்கு உணவில்லாத போது சிறிது கண்களுக்கும் ஈயப் படும். இந்தப் பாடலின் வரிகளும் சரி காட்சி அமைப்புகளும் சரி உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் நிச்சயம் விருந்து படைக்கும். பச்சைப்பசேல் புல்வெளிகள் , நீர் வீழ்ச்சிகள் , அந்த தண்ணீருக்குள் நிற்கும் தனிப் பாறை (அதன் மேல் கூட ஒரு சில டான்ஸ் ஸ்டெப்ஸ். கொஞ்சம் பயமாக இருக்கிறது) கே.வி. ஆனந்தின் கேமரா ஒவ்வொரு ஃபிரேமையும் அனுபவித்து ரசிக்க வைக்கிறது.
ரெட்டை குழல் துப்பாக்கியாய் நாயகர்கள். அவர்களின் ஒற்றை குறி நாயகி. இருப்பினும் ஒருவர் மேல் வருவது தானே காதல். பெண்கள் தேர்வு எப்போதும் ப்ளே பாய்களை விட தெளிவான ஆண்களாக தான் இருக்கும். பாடலின் தொடக்கத்திலேயே தன் "மாற்றான்" ஐ தண்ணீரில் தள்ளி விட்டு நாயகன் காதலில் வெல்கிறார்.
சூர்யா (க்கள் ) மற்றும் காஜல் செம்ம பிரெஷ். இந்த மாதிரி லொகேஷனுக்கு (அதுவும் டைரக்டர் செலவில்) போனால் பிரெஷ்ஷா இல்லாம எப்படி ? பார்க்கும் நமக்கே பிரெஷ்ஷா இருக்கே. காஜல் காஸ்ட்யூம்ஸ் சூப்பர்.
சூர்யா (க்கள் ) மற்றும் காஜல் செம்ம பிரெஷ். இந்த மாதிரி லொகேஷனுக்கு (அதுவும் டைரக்டர் செலவில்) போனால் பிரெஷ்ஷா இல்லாம எப்படி ? பார்க்கும் நமக்கே பிரெஷ்ஷா இருக்கே. காஜல் காஸ்ட்யூம்ஸ் சூப்பர்.
"நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன் பக்கம் வந்தால் பூக்கிறேன்" எனும் நாயகன் "நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய், தாராய் தாராய் என் மோகம் தூண்டி நூறாய்" என்று பக்கத்தில் அழைத்து "பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய், கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா " என்று கேள்வி எழுப்புகிறான். கவிஞர் விவேகா. இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடகர்கள் விஜய் பிரகாஷ் , கார்த்திக், ஸ்ரேயா கோஷல்.
"ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும், நாம் போகும் பாதைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும்" என்று நாயகன் கூற "நதியிலே இலைபோல பயணம், இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம்" பாய்ந்த நாயகி "உன் எதிரே நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன்" என்கிறாள்.
அப்புறம் அந்த படகு சவாரி, பின்னணியில் விழும் நீர் வீழ்ச்சிகள். வாவ். சூப்பர். பாடலின் ஆரம்பத்திலேயே போட்டியிலிருந்து விலகிய மற்றொரு நாயகன் விருப்பமான பெண்ணின் விருப்பம் தன் சகோதரன் என்பதை அறிந்து சிறு ஆதங்கத்தோடு கூடிய ஆனந்தத்துடன் வாழ்த்துகிறான் . அந்த மென் சோகத்தை தன் கண்களில் காட்டும் சூர்யா அழகு.
" தொலை தூரம் போனதே என் மேகம், புரியாத மென்சோகம் உயிர் மேலே ஊசி இறக்கும். பிரிவாலே நான் போராட, விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம்" என்பவன் மேலும் "உன்னழகை வெளிக்காட்டும் சாரலில் , என்னை போன்ற சாயலில் ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே "

"நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம் இதயம் இதயம் சுகமாக இறக்கும் இனி"என்று தன் இரட்டை சகோதரனின் காதலில் மகிழ்ந்து அழகாய் விட்டுக்கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.
ஒரு பிரெஷ் ஃபீல் கொடுக்கும் இந்த பாடல். ஃபீல் இட். அதிலும் இந்த தமிழ் ரொம்ப ரொம்ப அழகு.
உங்கள் விமர்சனமும் fresh feel kogukkirathu Dheeksha.
ReplyDeleteArumai By AG.SARAVANAN
ReplyDeleteArumayilum arumai ungal vimarsanam.
ReplyDeleteThodaratum ungal payanam
by selvanayaki
"ரெட்டை குழல் துப்பாக்கியாய் நாயகர்கள். அவர்களின் ஒற்றை குறி நாயகி."
ReplyDeleteஇதையே அந்த பாடலில் ஒரு வரியாக வைத்திருக்கலாம்.
Fabulous imagination♥️
பிரெஷ் ஃபீல் கொடுக்கும் இந்த பாடலின் விமர்சனமும் ஃபீல் பிரெஷ்தான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteENGAIYA PIDIKIRA INDA MAADIRI KARPANAI ENNANGALAI. IPPO SONGAI PAARTHA UNGALIN VIMARSANAM MANATHIL NIRKIRATHU. SUPER DOOPER PONGA.
ReplyDelete