"கண்ணே, கலைமானே"

தாலாட்டுக்கள் பல ரகம். இது ஒரு தனி ரகம்.

உனக்குள் இருக்கும் தாய்மையை நானும், எனக்குள் இருக்கும் தந்தையை நீயும் கண்டு கொண்ட போதுதான் நமக்குள் இருக்கும் காதலை நாம் கண்டு கொண்டோம் என்றான் அவன். 

உனக்குள் இருக்கும் குழந்தையை நானும், எனக்குள் இருக்கும் குழந்தையை  நீயும் கண்டு கொண்ட போதுதான் நமக்குள் இருக்கும் காதலை நாம் கண்டு கொண்டோம் என்றாள் அவள்.

தன் கணவன் அல்லது காதலன் தன்னை ஒரு குழந்தையாக நடத்த வேண்டும் என்பதுதான் எல்லா பெண்களின் எதிர்பார்ப்பும். ஆம் எனும் பெண்கள் கை தூக்குங்கள். 1,2,3,4 ....…ஓ.கே. கிட்டத்தட்ட எல்லாருமே கை தூக்கி உள்ளீர்கள். (ஆண்கள், ப்ளீஸ். நோட் திஸ் பாய்ண்ட்)  ம்ம்ம். வாழ்க்கை நாம் நினைத்த படியெல்லாம் அமைந்து விடுகின்றதா என்ன? நினைத்தது நடக்காதவர்களின் ஆறுதலுக்காகவும் நினைத்தது நடந்தவர்கள் ஆனந்தத்திற்காகவும் இந்த பாடல் சமர்ப்பணம்.
கண்ணதாசன் அவர்கள் எழுதிய இறுதிப் பாடல். அவர் இறக்கும் முன் பதிவு செய்யப்பட்ட இறவா வரம் பெற்ற பாடல். நம் மரணம் வரை மறக்க முடியாத பாடல். இசை ஞானி இளையராஜா பல முறை கண்ணதாசனின் மெட்டுக்கு பாடல் எழுதும் வேகத்திற்கு எடுத்துக்காட்டாக சிலாகித்து வியந்த பாடல். பாலு மகேந்திரா " மூன்றாம் பிறை"  படத்தில் இடம்பெற்ற “கண்ணே, கலைமானே” பாடல். சிறந்த இயக்குனர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற படம்.  சிறந்த இயக்குனர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல தமிழ் நாடு அரசின் விருதுகளை வென்ற படம். K.J.யேசுதாஸ் அவர்களின் குரலைக் கேளுங்கள். ஹெவன்லி  வாய்ஸ். 


அள்ளி எடுத்து கொஞ்சத் தோன்றும் அழகுக் குழந்தை ஸ்ரீ தேவி.
அரவணைத்து காக்கும் அன்புத் தந்தை கமல்.

ஸ்டார்ட்டிங் மியூசிக்கே உங்களை  ஒரு ஆழ்ந்த  தியான நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய மியூசிக். ஊட்டியின் அழகை எல்லாம் அள்ளிக் கொண்டு  வந்து தரும் கேமரா. பாடல் தொடங்குவதற்குள் அந்தக் காட்சிகளை ரசித்து விடுங்கள். அப்புறம் கமல் , ஸ்ரீதேவி யை விட்டு நீங்கள் வைத்த கண்ணை எடுக்க முடியாது. "கண்ணே ,கலைமானே " என்று கமல் பாடத்  தொடங்கியதும்  ஸ்ரீதேவி தலையை சாய்த்து பார்க்கும் அழகும், "ஆரிரரோ ஓ ஆரிரரோ" எனும் போது தோள்களை உயர்த்தி சிரிக்கும் கள்ளமில்லா குழந்தை சிரிப்பும், கன்னத்தை சொரியும் குழந்தை இயல்பும் ஹய்யோ , உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். கொட்டாவி விட்டதும் கமல் தலையணையில் தலை வைத்து படுக்க சொல்ல, மாட்டேன் என்று அவரின் மடியில் தலை சாய்க்கும் போது பிடிவாதக் குழந்தை.  மடியில் படுத்துக் கொண்டு கமலின் லுங்கியில் மூக்கை தேய்க்கும் போதும், கமலின் காதை திருகும் போதும் கமல் கன்னத்தில் தட்டிக் கொடுக்கும் போது அவரின் கையை நாவால் வருடும் போதும் குறும்புக் குழந்தை.

கமல் ஸ்ரீதேவியின் தூக்கம் கலைந்து விடாமல் அவரை தலையணையில் படுக்க வைத்ததும் அவரின் சட்டையை பிடித்து கொள்ளும் போது விஷமக் குழந்தை. "காதல் கொண்டேன் , கனவினை வளர்த்தேன் ,
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன் " எனும் வரிகளில் கமல் ஸ்ரீதேவி தோள்களை தடவிக் கொடுப்பார் பாருங்கள். புதிதாய் பிறந்த கன்னுக்குட்டியை குழந்தைகள் தடவிக் கொடுக்குமே அப்படி ஒரு மென்மையாய் தடவி கொடுப்பர். ஆயிரம் அப்பாக்கள் தெரிவார்கள் அந்த தடவலில். "உனக்கே உயிரானேன் ,எந்நாளும் என்னை நீ மறவாதே " என்ற வரிகளில்  தனக்கு பிரியமான பொம்மையை யாரேனும் பிடுங்கிச் சென்று விடுவார்களோ என்பது போல்  ஒரு expression கொடுப்பார் பாருங்கள் கமல். (ஹப்பா , கமல். அப்பப்பா !! ) அப்போது அப்பாவுக்குள்  ஒளிந்திருக்கும் குழந்தை தெரியும். அதன் பிறகு வரும் "ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்" என்ற வரிகளில் கண்களில் துளிர்த்த கண்ணீரை கரை கடந்து விடாமல் , கண்களை சிமிட்டி கட்டுப்படுத்தும் போது எங்கள் ஹீரோ கமல் தெரிவார். அந்த நொடியில் உங்களுக்கும் தொண்டை அடைத்து, கண்கள் ஈரமாகலாம். அது இந்த பாடலின் வெற்றி. 

கமலும், இளையராஜாவும் சேர்ந்து இன்னும் இது போல் ஆயிரம் பாடல்கள் தரட்டும். வாழ்க பல்லாண்டு !

"ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்."


இதற்கு மேல் எழுத முடியாமல் கண்ணீர் என் கண்களை மறைக்கிறது.

இனி பாடல்.

https://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM





Comments

  1. இதற்கு முன்பும், பின்பும் எத்தனையோ பேர் குழந்தை தனமான character செய்திருந்தாலும், ஸ்ரீ தேவியை யாரும் மிஞ்ச வில்லை என்றே சொல்லலாம். கமல். கமல். கமல். அவர் இன்னொரு நடிகர் திலகம் தான். வேறென்ன சொல்வது. பாடல் selection super Dheeksha.

    ReplyDelete
  2. Very excellent by AG.SARAVANAN

    ReplyDelete
  3. அருமையான வர்ணனை♥️

    ReplyDelete
  4. Varnanaikku DEEKSHA THAN NIGAR great going. Keep it up. Try more.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "