"பூங்காற்றிலே உன் சுவாசத்தை "


இன்றைய பாடல் மணிரத்னத்தின் "உயிரே " படத்தில் இடம் பெற்ற "பூங்காற்றிலே உன் சுவாசத்தை " பாடல். வைரமுத்து எழுதி AR.ரஹ்மான் இசையமைத்து ,ஸ்வர்ண லதா, உன்னி மேனன் பாடிய பாடல்.

மணிரத்னம்  பாடலை படமாக்கிய விதமும், AR.ரஹ்மான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியது.
காதல் என்பதே ஒரு தேடல்தான். நம் நாயகனோ காற்றின் அலைவரிசையில் கலம் (காலம்) செலுத்துபவன்(ஆல் இந்திய ரேடியோவில் பணி ). அவன் கண் முன் மின்னலைப் போல் தோன்றி மறைந்த தன் காதல் தேவதையை தேடும் பணியையும் தன்  அலுவலகப் பணியோடு சேர்த்தே தொடங்குகிறான். பூங்காற்றில் தன் காதலியின் சுவாசத்தை தேடிப் பார்க்கும் நூதனமானவன் இவன். கடல் மேல் விழுந்த ஓர் துளியை (அது காதலியின் கண்ணீர்த்  துளியா , வியர்வைத்  துளியா தெரியவில்லை) தேடிப் பார்க்கும் வித்தகன் இவன். அவன் தேடத் தேட பாடல் வரிகளிலும், ARR ன் இசையிலும் நாம் முற்றிலுமாக தொலைந்து போகிறோம்.

அவன் தூது அனுப்பிய "காற்றின் அலைவரிசை கேட்கிறதா ?, கேட்கும் பாட்டில்  ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?" காதல் நெருப்பில் கருகிய இதயத்தின் வாசம் வருகிறதா?” என்று அடுக்கடுக்காக அவன் கேட்கும் கேள்விகள் மூலம் தன் காதல் வலியை நாயகிக்கும் பார்வையாளர்களுக்கும் கடத்துகிறான். "வானம் எங்கும் உன் பிம்பம் , ஆனால் கையில் சேர வில்லை, காற்றில் எங்கும் உன் வாசம்,வெறும் வாசம் வாழ்க்கையில்லை " எனும் வரிகளில் ஷாருக் பெர்ஃபாமன்ஸ் வாவ். சூப்பர். 

மனீஷா இந்த பாடலை விட "சந்தோஷ கண்ணீரே " பாட்டில் ரொம்ப அழகாக இருப்பார்.

கடைசியில்  ப்ரீதி ஜிந்தா வந்து ஷாருக்கிடம் நான் உள்ள வரவா? என்று கேட்க நோ, நாட் அலவ்ட், நானே வருகிறேன் என்று ஷாருக் சைகையில் ஒரு x மார்க் போட்டு சொல்வார் பாருங்கள் , அந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும்.
ALL TIME FAVORITE  MELODY.


Comments

  1. உங்கள் விமர்சனத்தைப் படித்து விட்டு பாடலைக் கேட்கும் போது பாடலே புதி தா க தெரிகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. My all time favourite song♥️♥️

    ReplyDelete
  3. Uirukku uir ootugireergal. UNGALIN diary kurippu arumaiyo arumai. Erumaikkun (ennai kurippitten)rasikka thonrum kadai pakkkuvam super, excited, fantastic. Keep it going.

    ReplyDelete
  4. சுவாசமே உங்களின் பாட்டு சுவாசமே எங்களில் சுவாசமக.
    என்றும் அன்புடன்,
    மா பெ சா பிள்ளை

    ReplyDelete
  5. நீங்கள் பாடலை நேசிக்கிறீர்களா இல்லை சுவாசிக்கிறீர்கள் ஆ என்றே தெரியவில்லை ஒவ்வொரு பாடலின் விமர்சனமும் எழுதிய பாடலாசிரியர் அளவுக்கு சிந்திக்கிறீர்கள் அருமை அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "