"சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
இன்று நாம் சுவைக்கவிருக்கும் பாடல் "சுந்தரி கண்ணால்
ஒரு சேதி" . மணி ரத்னம் அவர்களின் மணியான
படைப்பு. தளபதி படத்திலிருந்து. இசை நம்ம இளைய ராஜா. ஒரு மென்மையான காதல் பாடலில்
ஒரு போர்க்கள பின்னணி இசையைப் புகுத்தும் புதுமை இளைய ராஜாவுக்கும் மட்டுமே கை வந்த
கலை. இதை ஒரு போர்களப் பின்னணியில் எடுத்த மணிரத்னத்தின் கற்பனைத் திறனை பாராட்டாமல் இருக்க முடியாது. பாடலை
எழுதியவர் வாலிப நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட
வாலிப வாலி . SPB, ஜானகி யின் மனதை மயக்கும் மந்திர குரலில்.
ரஜினி குதிரையில் வரும் முதல் காட்சியில் ,ஷோபனா அருகில்
வந்ததும் இறங்கப் போகிறார் என்று நினைக்கையில் "அலேக் " காக ஷோபனாவை தூக்கி
குதிரையில் வைத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்ததுமே பாட்டு "டேக் ஆஃப் " ஆகி
விடும். அதன் பிறகு வருவதெல்லாம் கவிதை, கவிதை.
"என்னையே
தந்தேன் உனக்காக, ஜென்மமே கொண்டேன் அதற்காக" என்று காதலுக்காக தன்னையே அற்பணித்த நாயகி.
“தேனிலவு நான்
வாட ஏனிந்த சோதனை ” என்கிறாள் நாயகி. “வானிலவை நீ கேளு, கூறுமென் வேதனை ” என்று வானிலவை
தூதனுப்புகிறான் நாயகன். “என்னைத்தான் அன்பே மறந்தாயோ? “ என்று தவிக்க, “மறப்பேன் என்றே
நினைத்தாயோ ” அவர் வார்த்தைகளைக் கொண்டே அவரை மடக்கும் நாயகன். இப்படி வரிக்கு வரி
நாயகன் நாயகியின் வார்த்தைப் போரை ரசிப்பீர்களா, காட்சி அமைப்பில் வரும் போரை ரசிப்பீர்களா
என்பதை ரசிகர்களாகிய உங்களின் பொறுப்பிலேயே விட்டு விடுகிறேன்.
"உடனே வந்தால் உயிர்
வாழும்" என்கிறாள் நாயகி. நாயகனோ போர் முனையில். உடனே வருவது எப்படி சாத்தியம்? காதலும்
ஒரு போர்க்களம் தான். இதிலும் பின் வாங்க முடியாது நாயகனால். இந்த பெண்ணோ உயிரையே விட்டு விடுவேன் என்கிறாள். இதென்னடா ஒரே அக்கப்போராக
உள்ளதே என்று நாம் நினைக்கையில், "வருவேன் , அந்நாள் வரக்கூடும்" என்ற நம்பிக்கை வார்த்தையில்
ஆறுதல் தருகிறான் நாயகன் , நாயகிக்கும் பார்வையாளர்களாகிய நமக்கும். Awesome வாலி சார்.
இந்த பாடலுக்கு
SPB , ஜானகி யின் குரல், திகட்டாத தெள்ளமுது.
படம் வந்த போது
ரஜினியின் இந்த தளபதி ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு திரிந்த ரஜினி ரசிகர்கள் ஏராளம்.
ம்ம். அது ஒரு
அழகிய கனாக் காலம்.
இனி பாடலை சுவையுங்கள்.
😍😍😍
ReplyDeleteIthu paadal alla. Oru kathal kathai.
ReplyDelete❤❤❤
ReplyDelete