"இஞ்சி இடுப்பழகா"
இன்று நாம் சுவைக்கவிருக்கும் பாடல் தேவர் மகன் படத்தில் . இளையராஜா வின் இசையில்
. கமல் ஹாசன் , எஸ்.ஜானகி
குரலில் வரும் "இஞ்சி இடுப்பழகா" பாடல்.
பிரிக்க முடியாதது
எதுவோ என்று கேட்டால் இப்போது தருமி கூட சொல்லி விடுவார் "கமலும், காதலும்"
என்று. காதல் இளவரசன் என்றால் சும்மாவா. இளவரசனாக இருப்பதில் ஒரு வசதி. அரசர்களுக்கு
வயதாகி விடும். இளவரசர்கள் எத்தனை வயதானாலும் இளவரசர்கள்தான். கமலுக்கும் என்றுமே வயதாவதில்லை.
பெயர் வைத்தவரின் தீர்க்க தரிசனம் வாழ்க.
(கமல் ஆர்யாவிற்கு
காதல் இளவரசன் பட்டத்தை கொடுத்து விட்டாலும் எங்கள் போல் இன்னும் பலருக்கு கமல்தான் "காதல்
இளவரசன்". இந்த பாடலை பார்த்தாலே எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள். இது போல் இன்னும்
எத்தனையோ பாடல்கள்.)
நிர்பந்தத்தால்
நடக்கும் திருமணத்தில், இரு மனங்களுக்கு இடையில் உருவாகும் பந்தம். அதை அழகாக வெளிப்படுத்தும்
பாடல்.
"காத்துதாங்க
வருது" ரேவதியின் அப்பாவித்தனமும், கமலின் காதல் தனமும், "மறந்துருவேன்னீங்களே"
என்ற இடத்தில், கமலின் சிரிப்பு சத்தமும், "மறக்க மனம் கூடுதில்லையே" . ப்பா
, கமல் என்ன பிரெஷ்ஷா இருக்கார். எஸ்.ஜானகி
தினமும் தண்ணீருக்கு பதில் தேன் தான் குடிப்பார்களோ. அவர் குரலை கேட்கும் போது
"இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" முக்கியமாக " தன்னந்தனிச்சிருக்க,
தத்தளிச்சுத்தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரைய" எனும் வரிகளில்.
அப்புறம், “அங்க
சாமி கும்பிட வரலையா என்பது போல் கமல் கேட்க , எனக்கு நீங்கதான் சாமி எனும் அர்த்தத்தில்
கமலின் கால்களில் ரேவதி விழுந்து கும்பிடவும் பின்னணியில் ஒலிக்கும் " உன் கழுத்தில்
மாலையிட , உன்னிரண்டு தோளைத்தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா" எனும் வரிகளில், ரேவதியின் எக்ஸ்பிரஷன், வாவ், சூப்பர்!
இளையராஜாவின் இசை சூப்பர்.
இனி பாடலை சுவையுங்கள்.
இனி பாடலை சுவையுங்கள்.
Wowww!!! Fantastic ♥️
ReplyDelete/எஸ்.ஜானகி தினமும் தண்ணீருக்கு பதில் தேன் தான் குடிப்பார்களோ./ super
ReplyDeleteநீங்களும் பாடத்தை படிப்பதற்கு பதில், கவிதையாக படித்து விட்டீர்களா? என்ன ஒரு விமர்சனம். கமல் என்றைக்கும் fresh thaan
ReplyDeleteEthanai murai paartha padal enralum ungal vimarsanathai padithuvittu pargum pothu padale puthithaga therikirathu, keep it up
ReplyDeleteKAMAL KAADALITHARO ILLAIYO NEENGAL NANRAGA KAVITHIRUKEREERGAL. NALLA VIMARSANA KUILO.
ReplyDelete