தொடு வானம் /Thoduvanam Thodugindra
ஒரு நான்கு நிமிட பாடலுக்குள் இவ்வளவு விஷயங்களை வைக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கண்டெண்ட் ஃபுல் சாங்தான் இது.
ரொமான்ஸ் , கண்ணீர், ஹியூமர், த்ரில், ஒரு மர்டர் அனைத்தும் ஒரு பாடலில்.டைரக்சன் கே வி ஆனந்த்.
ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் அதை முன்னமே அறிந்த நாயகி. இப்பொழுது தான் அறிந்த நாயகன்.இந்த ஜென்மத்திலும் அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற வேதனையிலும் பதற்றத்திலும் பாடும் பாடல்.
தொடக்கத்திலேயே வரும் வயலின் மியூசிக்கை கேட்கும் போதே அந்த இசை கண்கள் மூடி ரசிக்கச் சொல்லும். ஆனால் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் வரும் காட்சிகள் உங்களை கண்கள் திறந்து ரசிக்கச் செய்யும்.
தொடக்கக் காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு வரும் தனுஷ் செம சார்மிங். "பாய் நெக்ஸ்ட் டோர்" ஃபீல் கொடுப்பதுதான் தனுஷின் பிளஸ்.
ஹரிஹரன் வாய்ஸ் செம சூப்பர். சோகத்தை அலை அலையாய் பரப்புகிறது அவரின் குரல்.
"தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்"
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியது, உயிரெல்லாம் உருகியது. உருகி முடிப்பதற்குள் உன்னை காண்பேனோ என்று ஒரு வேதனையான வேண்டுகோளை முன் வைக்கிறாள் நாயகி. (குரல் சக்திஸ்ரீ கோபாலன்)
தனுஷின் அந்த போர்வீரன் கெட்டப் எனக்கு "பொன்னியின் செல்வன்" "வந்தியத்தேவனை" ஞாபகப்படுத்தியது.
உங்களில் யாருக்கேனும் அப்படித் தோன்றியதா?
"இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுவதும்
காற்றடித்தால் சிதறுவதுமான கற்பனை காட்சி எவ்வளவு அழகு. வைரமுத்துவின் வரிகள் "பொன்னே பூந்தேனே"
காதல் காட்சிகளில் தாலாட்டும் இசை கார்த்திக் ,நாயகியின் தந்தையை கொலை செய்யும் காட்சியில் மிரட்டுகிறது. அசத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
காதலைப் பிழிந்து கண்ணீர் நதியாய் வழியும் பொழுதும் (கார் ஓட்டிக்கொண்டே கண்ணீர் வழிய தனுஷின் முகம் அருமையான நடிப்பு)
நாயகன் சொல்வதை கேளுங்கள்.
"காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன,
இந்த வரிகளின் போது தனுஷூம் அமைராவும் மிக உயரமான பாலத்தில் அமர்ந்து இருப்பார்கள்
"நீரினை தேடும் வேரினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்"
எனும் வரியின் போது கேமரா கீழே கீழே ஆழமாக சென்று கொண்டே இருப்பதை பார்க்கும் பொழுது நீரினை தேடும் வேர் ஞாபகம் வரவில்லை?
"கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே"
என்ற நாயகனின் குரலுக்கு
"சிறுபொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ"
என்ற நாயகியின் பதில் ஜென்ம ஜென்மமாய் அவனைத் தொடர்ந்து வரும் அந்தப் பெண்ணின் துயரத்தை, படத்தின் கதையை கூட இந்த இரண்டே வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தி விடுகிறது.
தனுஷ் என்ன ஒரு திறமையான ஆக்டர் என்பதற்கு இந்த பாட்டு ஒரு உதாரணம்.
வித்தியாச வித்தியாசமான கெட்டப்.
ஒவ்வொரு கெட்டப்பிலும் நேர்த்தியான நடிப்பு. அதில் டைரக்டரின் பங்கு பெரிது.
தனுஷ் ஒரு சிறந்த நடிகர்.
தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்.
https://youtu.be/vSYI6ZrkE80




நானும் இந்த song நிறைய தடவ பார்த்து இருக்கிறேன். எனக்கு இது எதுவும் தோன வே இல்ல. Great Dheeksha நீங்க.
ReplyDeleteநன்றி ! மிக அற்புதமான விளக்கம்.பாடலின் வரிகளை மிக ஆழமாக உணர்த்தி, அழகாக படத்தின் இயக்குனர் போன்று படத்தை பார்த்து ரசிக்க வைத்தது உங்கள் விமர்சனம். பாடலை கேட்டேன் இதுவரை, இப்போது ரசித்தேன் பாடலின் வரிகளை காட்சியுடன். தொடரட்டும் உங்கள் விமர்சனம். வாழ்த்துக்கள்.
ReplyDelete"நீரினை தேடும் வேரினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்"
ReplyDeleteஎனும் வரியின் போது கேமரா கீழே கீழே ஆழமாக சென்று கொண்டே இருப்பதை பார்க்கும் பொழுது நீரினை தேடும் வேர் ஞாபகம் வரவில்லை?
Wowwwww!!!
The way you describe each and every small detail is amazing!!
One of my all time favourite songs!
I always listen to songs,closing my eyes. Your review makes me to open my eyes and enjoy every scene of the song!!
Thank you. ரசனை பகிர்வோம்.
Delete