சொல்லத்தான் நினைக்கிறேன் / Sollathan Ninaikiren



உலகையே ஆட்டி வைக்கும் அந்த ஒற்றை மந்திரச்சொல் இவளையும் ஆட்டி வைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.



"காதல் காதல் காதல்"

என்று மனதிற்குள் சொல்லிப்பாருங்கள் சுகமாய் இனிக்கிறதா? இந்த நாயகி அப்படித்தான் சொல்கிறாள். 

''சொல்லத்தான்

நினைக்கிறேன் சொல்லாமல்

தவிக்கிறேன் காதல் சுகமானது

வாசப்படி ஓரமாய்

வந்து வந்து பார்க்கும் தேடல்

சுகமானது'

இப்பொழுதெல்லாம் வாசல்படியில்  நிழல் ஆடுவதே இல்லை. எனவே வாட்ஸ் அப்பின் ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது என்று வரிகளை மாற்றிக் கொள்வோமா?


"அந்தி வெயில் குளித்த சிறு மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே  அழ வைக்கிறாய் "

என்று அழகாக நாயகி தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்

பர்த்டே பார்ட்டி முடிந்ததும் நாயகன் ஊதிய பலூன் எடுத்து நாயகி அவன் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் இடம் , அப்புறம் கோவிலில் நாயகனுக்கு தலையில்  சடாரி வைத்து எடுத்தவுடன் அடுத்ததாக ஓடிப்போய் இவர் தலையில் வாங்கிக் கொள்ளும் இடமும் அழகு. சினேகா அந்த சில்வர் கலர் டிரஸ்ஸில் செம அழகு. 



பூவின் மேல் பாறையாய் உயிரை வதைக்கும் தனிமையை தாங்குவது எளிதா? விழி தூங்குவது எளிதா?


கண்ணில் தீ வைத்துப் போனது நியாயமா என்று கேட்கும் அவள் அடுத்த வரியிலேயே அவன் மன வங்கியில் அவளை சேமித்துவைக்கவும் சொல்கிறாள். இந்த காதல் என்பது வினோதமாக தான் இருக்கிறது. அவள் மனசு மட்டும் அல்ல கொலுசும் அவன் பெயரை ஜெபிக்கின்றதாம். பார்ப்போம் கூட்டுப்பிரார்த்தனை 

பலன் தருகிறதா என்று.

"கண்ணில் தீ வைத்து

போனது நியாயமா என்னை

சேமித்து வை நெஞ்சில் ஓரமா

கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது"


சித்ராவின் குரல் இனிமையோ இனிமை.


உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்த பெண்களை மட்டுமே வர்ணிக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த ஆண்கள் இந்த வரிகளைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். 


"ஒரு ஆணுக்குள்

இத்தனை காந்தமா நீயும்

ஆனந்த பைரவி ராகமா

இதயம் அலை மேல்

சருகானதே"

ஆனந்தபைரவி ராகம் பற்றிய ஞானம் எனக்கில்லை. ஆனால் பெயரிலேயே ஆனந்தம் இருக்கும்பொழுது ஆனந்தத்திற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது.


இரும்பு மேகமாய் இவளின் சந்தன பௌர்ணமி தேகத்தில் வந்து அவன் மோதியதால் அவளோ தேயும் நிலவானாள்.

"காற்று மலை சேர்ந்து

வந்து அடித்தாலும் கூட

கற்சிலையை போலே

நெஞ்சு அசையாதது

சுண்டு விரலாய் தொட்டு

இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது"

இதற்கு என்ன பதில் சொல்வது. கடப்பாறைக்கு அசையாத கற்பாறை சிறு செடியின் வேருக்கு வழிவிடும் ஆச்சரியம் தான் இது.


பாடலாசிரியர் விவேகா ஒவ்வொரு வரியும் அழகு. அருமை. புன்னகை அரசி சினேகாவை பார்க்க பார்க்க இனிமை. பார்த்து , கேட்டு எல்லாம் நம்பாதீர்கள். அனுபவியுங்கள். 


"காதல் சுகமானது"



https://youtu.be/OM7EN_KtPpI


Comments

  1. இப்பொழுதெல்லாம் வாசல்படியில் நிழல் ஆடுவதே இல்லை. எனவே வாட்ஸ் அப்பின் ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது என்று வரிகளை மாற்றிக் கொள்வோமா?

    Indha kaalathil indha paadalai ezhudhi irundhaal kavignar appadithaan ezhudhi irupaaro ennavo!

    Nice dheeksha ❤️

    ReplyDelete
  2. உங்கள் ரசனை வெற்றி பெற்றது. இது விவேக *கண்மணி.*
    இன்றைய காதலர்கள் இங்கனம் இயல்பாக இசைக்கிறார்களா எனும் அந்தி ஆவல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "