கலைமகள் கைப் பொருளே / Kalaimagal kaiporule
நாயகனோ பெருங்குடிமகன். (ஜமீன்தார்). நாயகியோ அவனிடம் பணிபுரிந்து தன் பெரிய குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவள். நாயகனின் மனிதநேயம் பற்றி அறிந்தவள் அவள் ஒருத்திதான். அவனைச் சுற்றியுள்ள அனைவரும் அவனின் வெளியே தெரியும் குறைகளை மட்டும் பார்க்கும் போது அவள் மட்டும் தான் அவன் மனதிற்குள் இருக்கும் மனித நேயத்தையும் நிறையையும் கண்டுபிடித்தவள். தாய் அன்புக்காக ஏங்கும் குழந்தை மனத்தையும் அறிந்தவள் அவளே. அவன் குறைகளை களைந்து அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க வேண்டும் . பிறரின் அவச்சொல்லிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் அதன் வழியை அறியாத ஒரு கலக்கம். இதைச் செய்ய நமக்கு தகுதி உண்டா எனும் குழப்பம் . கலக்கமும் குழப்பமும் வரும்போது நாம் சரண் புகுவதே இறைவனின் பாதங்களைதானே. நமது நாயகியும் கோவிலுக்கு புகுந்தவள் தூசு படிந்து இருக்கும் வீணையைக் கண்டு வீணையும் நாயகனும் ஒன்று தானோ என்று எண்ணிக் கலங்குகிறாள். அவள் மன போராட்டத்திற்கு மருந்தாகும் இசை நமக்கு எல்லாம் விருந்தாகிறது. கான சரஸ்வதி பி .சுசீலாவும் , கலைமகள் சரஸ்வதியும் இணைந்தால் இசை வெள்ளத்திற்கு கேட்கவா வேண்டும். நம் மனப் துயரை எல்லாம் அடித்துச் சென்றுவிடும் இசை வெள்ளம். இசை கே வி மகாதேவன்.
"கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ"
சுசீலாவின் குரல் அமுதை பொழிகிறது.
வாணி ஸ்ரீ என்ன அருமையாக நடித்திருக்கிறார். உன்னை மீட்டவும் விரல் இல்லையோ எனும் வரியில் வீணையை கனிவுடன் ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் அவ்வளவு அழகு. அதன்பிறகு சிவாஜியை நினைத்துக் கொண்டு கனவில் மிதக்கும் விழிகள்.
"உன்னிடம் ஆயிரம் ராகங்களே ,என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே " எனும் வரியில் வாணிஸ்ரீயின் பரவசப் புன்னகை. "இசை அறிந்தவர்கள் மீட்டுங்களே, இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்" எனும் வரியில் கலக்கக் கண்ணீர்.
வாவ். அருமை யான நடிப்பு.
செல்வ வளம் கொழிக்கும் மாளிகையில் அன்புக்கு ஏங்கும் வறியவனாக அலைபாயும் நாயகனின் அவல நிலை கண்டு வருந்தும் அவள் அடுத்த வரியிலேயே "நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட " என்ற சந்தேகம் கொள்கிறாள் "ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்" அவன் மேல் கொண்ட அபரிமிதமான அன்பின் காரணம் புரியாமல் தவிக்கிறாள். வாணிஸ்ரீயின் உடை அலங்காரம் சிகை அலங்காரம் நடிப்பு அனைத்தும் அழகோ அழகு.
வீணை வாசிக்கும் போது இவ்வளவு வியர்வை வருமா?
ஒரு வேளை மனதின் புழுக்கம் தான் வியர்வையாக வெளிவருகிறதா?
சிவாஜியின் ஸ்டைலைப் பாருங்கள் அவர் காஸ்ட்யூம் ஐ பாருங்கள். பரம்பரை ஜமீன்தார்கள் எல்லாம் அவர் முன் கொஞ்சம் டல்லாக தான் தெரிவார்கள்.
"சொர்க்கமும் நரகமும் நம் வசமே - நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே"
இந்த வரிகளில்தான் கோவிலுக்குள் சிவாஜியின் என்ட்ரி. க்ளோசப் ஷாட் நாயகியின் மேல் இம்பிரஸ் ஆகும் காட்சி.
"சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே"
கவிஞர் கண்ணதாசன் உருகி உருகி இழைத்த வரிகள்.
இந்தப் பெண்கள் எப்போதும் அற்புதமானவர்கள். மனதுக்கு பிடித்தவர்களை ஒரு குழந்தையாக நினைக்கும் அந்த தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம். இப்படி நேசிக்கும் ஒரு பெண் கிடைத்து விட்டால் அது அந்த ஆணுக்கு வரம்.
இந்த காட்சியில் சிவாஜியின் ஒரு உதட்டுச் சுழிப்புடன் கூடிய சிரிப்பும்
கண்களில் வழியும் காதலும் வாணிஸ்ரீ மட்டும் திரும்பி பார்த்திருந்தால் "ஆனந்த் ஐ லவ் யூ ஆனந்த் " என்று அந்த நிமிடமே சொல்லியிருப்பார். அப்படி ஒரு நடிப்பு சிவாஜி முகத்தில். நல்லவேளை பின்னால் நின்றதால் நமக்கு வசந்த மாளிகை என்று ஒரு முழுநீள காதல் காவியம் கிடைத்தது. அந்த மாளிகையில் இன்டீரியர் ,சுவர் ஓவியங்கள் , எல்லாம் பாருங்கள், பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள். டைரக்டர் கேஎஸ் பிரகாஷ் ராவ், சிவாஜி ,வாணிஸ்ரீ ,P. சுசிலா , கே வி மகாதேவன் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இந்த உலகில் இதைப்போல் மீட்டாத வீணை கள் இன்னும் எத்தனை எத்தனையோ?
அதற்கெல்லாம் மீட்டும் ஒருவிரல் கிடைத்தால் உலகம் முழுதும் இசை மழை தான். இன்பமயம் தான்.
பாடல் பார்த்து ரசியுங்கள்.
https://youtu.be/iZy6SY9Yqoc
Thank you, padikka padikka paravasam, review padikkum pothe paadalai paratha niraivu, review vaarthaigal arputham, keep it up
ReplyDeleteBy selvi
❤️❤️❤️❤️
ReplyDeleteவீணை பாடல் களுக்கே அந்த சரஸ்வதி யின் அருள் முழுதும் கிடைத்து விடும் போல. அற்புதமான பாடல். அருமையான விமர்சனம்.
ReplyDeleteWhat a review for this outstanding fantastic evergreen super hit melody song. The long review itself shows how much you have gone deep into the song and your perspective view reflects in your words. Enjoyed the song more,.Kavinjar Kannadasn's outstanding lyrics looks more meaningful with Suseela ma mesmerizing voice no one can forget. Thanks for selecting this song and appreciate your contribution towards Tamil. Keep going.....God bless.
ReplyDeleteThank you very much sir
ReplyDelete