" பூவே இளைய பூவே" பாடல் விமர்சனம் முழு பாடல் வரிகளுடன்

 


அவளை பூ என்று சொல்லலாமா? இல்லை பூவின் மகளல்லவா அவள்? இளைய பூவே என்று அழைக்கலாம். ஒரே ஒரு பூவா அவள்? இல்லை இல்லை. உலகின் ஒட்டு மொத்த பூக்களையும் மலர்விக்கும் வசந்தம் ல்லவா அவள். அதுவும் வரம் தரும் வசந்தம். என் மடி மீது தேங்கும் தேன் அவள். அவள் எனக்கானவள். 


"பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மடி மீது தேங்கும் தேனே

எனக்குத்தானே எனக்குத்தானே"


இந்த" எனக்குத்தானே" என்று உச்சக்குரலில் மலேஷியா வாசுதேவன் பாடும் போது நாமும் நம் மனமும் இசை எனும் மலை உச்சிக்கு பறந்து செல்கிறது. வாய்ஸ் செம சூப்பர்.


அலை அலையாக வளர்ந்து கிடக்கும் இவள் கூந்தலை என்னவென்பது?  இரவுகளை இழை இழையாக பிரித்தால் அதுதான் இவளின் கூந்தலோ?


"குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே"


என்ன அழகான வர்ணனை          "இரவுகளில் இழை" இந்த வார்த்தைகள் திடுமென்று ஒரு கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் சென்று விடுகிறது அல்லவா?


அவள் விழிகள் இரண்டும் கடல் ஆனதாம். இவர் மனம் அந்த கடலில் படகாக தத்தளிக்கிறதாம்.  இந்த கற்பனையை கேட்கும்பொழுது நம் மனமும் கடலில் படகாய் அலைபாய்கிறது அல்லவா?


"விழி இரண்டு கடலானதே

எனது மனம் படகானதே"



உண்மையான உண்மை தான் சில்க்ஸ்மிதாவின் கண்கள்,  ஹப்பா , கண்களா அவை பார்த்தாலே பரவசமூட்டும் மது கிண்ணங்கள். கவர்ச்சி நடிகைகளை பார்த்து முகம் சுளித்த பெண்களே கூட சில்க்ஸ்மிதாவின் வருகைக்குப் பின்னர்தான் அவரை ரசிக்க ஆரம்பித்தனர். அவரின் ஒரு பாடலால் ஓடிய படங்கள் எத்தனையோ? ஆண்கள் பெண்கள் அனைவரையும் கவர்ந்த வசீகர அழகு அவருடையது. (ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பாதி கடித்துவிட்டு வைத்த ஒரு ஆப்பிளை அவர் உதவியாளர் “சில்க்ஸ்மிதா கடித்த ஆப்பிள்” என்று சொல்லி ஏலம் விட்டு பல ஆயிரங்கள் சம்பாதித்தார் என ஒரு செய்தி படித்துள்ளேன்).


அவள் நகம் எல்லாம் பளிங்காய் ஒளிவீச, ஒளி வீசும் நிலவு வந்து  நகத்தில் முகம் பார்த்ததாம்.


"இளம் பளிங்கு நகம் சேர்த்ததே

நிலவு அதில் முகம் பார்தததே"


புளிக்கும் காய் கனிந்து இனிக்கும் பழமாகும். சிரிப்பு கனிந்தால்? அவள் சிரிப்போ கனியும் முன்னும் ருசிக்கின்றது. கனிந்த பின்னும் ருசிக்கின்றதே?! என்ன விந்தை இது? (எல்லாம் வைரமுத்துவின் கைவண்ணம் தான்)


அவளின் இளம் சிரிப்பு ( புன்னகை ) ருசியானது. அதுவே கனிந்து அவள் வாய் விட்டு சிரித்தால், இசையாய் கனிந்து இனிக்கின்றதே! 


"இளஞ்சிரிப்பு ருசியானது

அது கனிந்து இசையானது"


அவள் குரல் குயில் குரல் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் குயில் மகளின் குரல் என்று சொல்லலாம். அவ்வளவு இளமை கொஞ்சும் குரல் அல்லவா? அந்த குரல் இவர் இருதயத்தில் மழை தூவி நனைக்கின்றது.


"குயில் மகளின் குரலானது

இருதயத்தில் மழை தூவுது"


சூரியன் காயும் இரவை பார்த்து இருக்கிறீர்களா? இதோ அவள் விழிகளில் இரு சூரியன் காய்கிறது. அவள் இரு புருவமோ இரவானது.


"இரு புருவம் இரவானது

இருந்தும் என்ன வெயில் காயுது"


பிரபு , சில்க் ஸ்மிதா நடித்த பாடல். இந்தப் பாடலை இப்பொழுது பிரபு பார்த்தால் அவரே "நானா அது?" என்று யோசிப்பார். 


(என்னுடைய பழைய போட்டோக்களை பார்த்து நான சில நேரம் நினைத்திருக்கிறேன் "நாமா இப்படி இருந்திருக்கிறோம்? " என்று . அப்படி ஒன்றும் அருக்காணியிலிருந்து ஐஸ்வர்யாராயாமாறி விடவில்லை. இருந்தாலும் நம் மனதை தேற்றிக் கொள்கிறோம் இல்லையா?)


வர்ணனை பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக என் மனதில் நிற்கும் பாடல்."கோழி கூவுது" பட பாடல் ,இளையராஜா இசையில் ,வைரமுத்துவின் வரிகளில். மலேசியா வாசுதேவனின் சிறப்பான குரலில்.


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கேட்டு ரசிக்கவும்.


https://youtu.be/yIPxZtuUb0k

பாடல் வரிகள் இதோ :


பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மடி மீது தேங்கும் தேனே

எனக்குத்தானே எனக்குத்தானே


குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

விழி இரண்டு கடலானதே

எனது மனம் படகானதே

இளம் பளிங்கு நகம் சேர்த்ததே

நிலவு அதில் முகம் பார்தததே



இனிக்கும் தேனே எனக்குத்தானே

பூவே இளைய பூவே


இளஞ்சிரிப்பு ருசியானது

அது கனிந்து இசையானது

இளஞ்சிரிப்பு ருசியானது

அது கனிந்து இசையானது

குயில் மகளின் குரலானது

இருதயத்தில் மழை தூவுது

இரு புருவம் இரவானது

இருந்தும் என்ன வெயில் காயுது


இனிக்கும் தேனே எனக்குத்தானே

பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மடி மீது தேங்கும் தேனே

எனக்குத்தானே எனக்குத்தானே

எனக்குத்தானே


Comments

  1. Thanks again for your wonderful review. I am wowed by your discription of the song which i have listened many times,but in sync with the movie only as normal person. Now I am amazed to know the power of lyrics by Vairamuthu and his creation and its like dream i listened to the song now after reading this on the lyricist perspective which I think you have opened up for the reader. Great 🙏. Keep going. God bless.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "