அன்பே அன்பே கொல்லாதே
பெண்களை வர்ணிப்பது என்றால் இந்த கவிஞர்களுக்கு கொள்ளை இன்பம்தான். அவர்களுக்கு மட்டுமா? கேட்கும் நமக்கும்தான்.
அம்புதான் கொல்லும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவரோ "அன்பே அன்பே கொல்லாதே" என்கிறார். அவரின் அன்பு காதலி அம்பு விழிகளால் கொல்கிறாளோ? பாடல் தொடக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் அந்த டான்ஸ் ஸ்டெப் ஒரு பார்பி டால் மாதிரி இருக்கும். அவ்வளவு அழகு. அந்த அழகுப் பெண் அவள் புன்னகையில் இவர் இதயத்தை வெடிக்கிறாளாம், உயிரை குடிக்கிறாளாம். இன்னும் என்னென்ன பண்ணுகிறாள் என்று பார்ப்போம்.
"அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே"
கவிஞர் பிரம்மனை கஞ்சன் என்று இகழ்வதற்கும், வள்ளல் என்று புகழ்வதற்கும் சரியான காரணம் இருப்பது போல் தான் தோன்றுகிறது ஐஸ்வர்யா ராயை பார்க்கும்பொழுது.
ஐஸ்வர்யா ராய் அணிந்த அணிகலன்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்கும் பொழுது நாயகன் மட்டும் துடித்துக் கொண்டிருக்கிறார்.
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் ஓவியம் எழுத , ஓவியத்திற்கு உயிர் கொடுக்க 100 அடி பளிங்கை ஆறடி அளவுக்கு சிற்பிகள் எல்லாம் சேர்ந்து செதுக்க , அத்தனை அழகும் சேர்ந்து நாயகனை வதைக்க, பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்க உயிர் பெற்றெழுகிறாள் அந்த ஓவியப் பெண்.
"மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடிநூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி "
"இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி" என்கிறார் நாயகன்.
உண்மைதான் உலகமே ஒத்துக் கொண்ட பிரபஞ்ச அழகி ஆயிற்றே!
இப்படி கொடுமை செய்யும் பெண்ணிற்கு இவர் என்னவெல்லாம் செய்யப் போகிறாராம் கேளுங்கள்!
ஆண்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனது?
நிலவில் ஆக்ஸிஜன் நிரப்புகிறேன் என்கிறார் . மேகத்தில் மெத்தை தைக்கிறேன் என்கிறார். பூவை அவள் தூங்கும் போது வேர்வை வந்தால் நட்சத்திரம் கொண்டு துடைக்கிறாராம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவள் உயிர் காக்க தன் உயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறை இடுவது தான் ஹைலைட்டான கற்பனை. செம வைரமுத்து சார்.
"மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்"
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேர்த்து வைக்கிறாராம். (எனக்கு ஒரு சந்தேகம் அப்போ ஐஸ்வர்யா ராய் எப்பப்பா குளிக்கிறது?😂😂 குளிக்கவெல்லாம் முடியாது வேண்டுமானால் தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது )
So, நாயகனுக்கு தீர்த்தம் கிடைப்பது கஷ்டம்தான். 😀
அருமையான A.R. ரஹ்மான் இசையில், அற்புதமான ஹரிஹரன் குரலில் , வைரமுத்து செதுக்கிய ஷங்கரின் "ஜீன்ஸ்" பட பாடல்.




Very nice review ad pleasant to read such a great song in detail which makes the reader know more about the lyrics and the use of words. Beautiful song equally wonderful discription. Keep going. Thanks.
ReplyDeleteThank you so much sir
DeleteVery nice. Keep going.
ReplyDeleteVery nice. Keep going.
ReplyDelete