கப்பலேறிப் போயாச்சு

 


நம்மில் பாதிப்பேர் சுதந்திரம் கிடைத்தபோது பிறந்து இருக்கவே மாட்டோம் . 

இந்த சுதந்திர குழந்தையை பெற்றெடுக்க பாரதத்தாய் இழந்தவை எத்தனை?


எத்தனை கண்ணீர்? எத்தனை செந்நீர்? எத்தனை வலிகள்? எத்தனை பலிகள்? அத்தனைக்கு பிறகு  அந்தக் குழந்தையை கையில் ஏந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் தான் எத்தனை எத்தனை?


அந்த சுதந்திம் பெற்ற கணத்தை , அந்த ஆனந்தத்தை நாம் அனுபவித்தால் எப்படி இருக்கும்?  ஒரு டைம் மெஷினில் ஏறி அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு 1947 ஆகஸ்ட் 15 அன்றைக்கு செல்வோமா? இப்போ ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை?ஓ கே . ஒரு சிம்பிளான விஷயம் சொல்கிறேன் இந்த பாட்டை பாருங்கள். எஞ்சாய் தட் மொமென்ட்.


முதலில் அந்த ப்ளூட் இசை. எனக்கு ஒரு சந்தேகம் இந்த புல்லாங்குழல் இசை மட்டும் பாரெங்கும் ஒரு பரவச காதல் உணர்வை பரவ விட்டு விடுகிறதே எப்படி என்று?  அது காதல் கண்ணனின் கைக்குழலாக இருப்பதாலோ? பிறகு வரும் கோரஸ் ஒலி கேட்கும் போது உங்களுக்குள் ஒரு " ஜோஷ்"

கண்டிப்பாக உருவாகும். ஜோஷ் சரியான தமிழ் அர்த்தம் ஆவேசம்.

மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் கேட்கவா வேண்டும்? 






"கப்பலேறிப் போயாச்சு

சுத்தமான ஊராச்சு கண்ணம்மா

நட்டநடு ராவாச்சு

நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

விடியும் வரையில் போராடினோம்

உதிரம் நதியாய் நீராடினோம்

வெக்கலெல்லாம் வாளாச்சு

துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா

கண்ணம்மா" என்று SPB பாடத் தொடங்கும் போது உங்களுக்கும் எழுந்து ஆட தோன்றும். 


கடமை முடிந்தது. இப்போது காதல் அழைக்கின்றது.


கன்னத்தில் கண்ணீர் கோலம் போடும் வஞ்சிமான் சொல்கிறாள்

இங்கு இருப்பது நான் அல்ல நீ , அங்கிருப்பது நீ அல்ல நான். வெற்றியை கொண்டாட வேண்டிய தருணத்தில் நாம் இருவரும் தனித்தனியே இருந்தால் வாழ்க்கையே போராட்டம் தான்.

"உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்

தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்

நானோர் தீவாய் ஆனேன் வா வா

அம்மம்மா நாளெல்லாம் கானல் நீரைக் குடித்தேன்" சுசிலாவின் குரல் அமுதம்.


கானல் நீரை பருகி கொண்டிருக்கும் தலைவிக்கு  காதல் நீரை பரிசளிக்க வந்து கொண்டிருக்கிறார் தலைவன்.


வரும்  வழியில் தேசியக் கொடியைப் பார்த்ததும் கமல் முகத்தில் தெரியும் அந்த உணர்ச்சி பிரவாகம் . வாவ் எ கிரேட் சல்யூட் கமல் சார்.




அந்த 

"லாலா லாலா லாலலலா

லாலா லாலா லாலலலா

லாலா லாலா லலலாலாலா" வில்

வெள்ளுடை தேவதைகள் உங்கள் மனதிற்குள்ளும்  பூ தூவலாம். 







"அன்னமே அன்னமே நான் சொல்லி

வந்ததா தென்றலும் நேற்று"

இந்த வரிகளில் கமல் , சுகன்யாவின் முகத்தை கைகளில் ஏந்தி கொள்ளும் காட்சி அழகு.


"உன்னையே உன்னையே நான் எண்ணி

வெந்ததைச் சொன்னதா பூங்காற்று"

இவ்வளவு நாள் உன்னை பிரிந்து இருந்தது போதும் இனி ஒரு நொடி கூட உன்னை பிரிய மாட்டேன்





"உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்" என்று கமல் சுகன்யாவின் காலடியில் அமர அதை தாங்காது சுகன்யா கண்ணீரோடு எதிரில் அமர

"உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்"

என்று கூறி கண்ணீரில் கரைந்த சுகன்யாவை காதலில் கரைத்து விடுகிறார் கமல்.

சுகன்யாவுக்கு படம் முழுதும் வயதான தோற்றம்,  என்பதால் எல்லா ஸ்டேட் காஸ்ட்யூமையும் இந்த ஒரே பாடலில் போட்டு பார்த்து விடுகிறாரோ?


டைரக்சன் ஷங்கர். 


அருமையான பாடல் பார்த்து ரசியுங்கள்.




https://youtu.be/g7sZiiQDTkw



Comments

  1. அருமையான பாடல். சுதந்திர தினத்தில் நாட்டு பற்றும், காதலும் சரி விகிதத்தில் கலந்த பாடல் தேர்வு மிக அருமை. வாழ்த்துகள் Dheeksha.

    ReplyDelete
  2. அருமையான பாடல் சுதந்திர நாளை குறித்து, மற்றும் பாடல் சிறப்பும் அழகான விமர்சனம். நன்றி,வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "