சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது /Sippi Irukudhu Muthum Irukudhu

நேரம் போதவில்லை என்று ஓடிக் கொண்டிருந்த அனைவரும் நேரம் போகவில்லை என்று அமர்ந்து இருக்கின்றோம். ஆனால் சிப்பி இருந்தும் முத்தும் இருந்தும் திறந்து பார்க்க நேரமில்லாமலும், சிந்தை இருந்தும் சந்தம் இருந்தும் கவிதை பாட நேரம் இல்லாமலும் தவிக்கும் இந்த (உலக ) "நாயகன்'' க்கு நாமும் தான் கொஞ்சம் நேரம் வழங்கலாமே. சிந்தை மயக்கும் சந்தம் தரும் இசையரசி ஸ்ரீதேவி . சந்தத்திற்கு சங்கீதம் படிக்கும் தமிழ்கவி கமல்ஹாசன். புத்தம் புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவாய் ஸ்ரீதேவி மிளிர்கிறார்.  குர்தா மற்றும் குறுந்தாடியுடன் கவி அவதாரம் எடுத்திருக்கும் கமல்ஹாசன். சில பாடல்கள் கேட்டால் அந்த பாடலை மறுபடி மறுபடியும் முணுமுணுத்துக் கொண்டே இருப்போம் . அந்த மாதிரி பாடல் இது. எம் எஸ் வி , கண்ணதாசன் இணைந்தால் இசைக்கும், தமிழுக்கும் கேட்கவா வேண்டும். எஸ்பிபி ஜானகி இணைந்தால் இனிமைக்கும் அழகுக்கும் கேட்கவா வேண்டும். கே பி டைரக்ஷனில் "வறுமையின் நிறம் சிவப்பு. (சிறப்பு)" காஸ்ட்யூம் சேஞ்ச் இல்லை ,லொகேஷன் சேஞ்ச் இல்லை , ஆனால் என்ன ஒரு பாடல் பாருங்கள்.  இடையிடையே வரும் எஸ்பிபி யின் டயலாக்கை கேளுங்கள் "கம் ஆன் ஸே இட் ஒன்ஸ் அகைன்" அப்போது ஜானகியின் ஒரு சின்ன சிரிப்பு.  "தேவை பாவை பார்வை "முடிந்ததும் கமலின் கைகளும் கால்களும் போடும் தாளத்தை கவனியுங்கள். "பியூட்டிஃபுல்" இதையே எவ்வளவு பியூட்டிஃபுல் ஆக சொல்கிறார் எஸ்பிபி . "மயக்கம் தந்தது யார் தமிழோ , அமுதோ , கவியோ" ஐயோ கமல் சார் நான் எல்லாம் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் சார். என்னிடம் இப்படி கடினமான கேள்விகள் எல்லாம் கேட்டால் எப்படி பதில் சொல்வது ? இப்படி அமுதத்தமிழை அழகுக் கவியின் (கமலின்) வாயால் கேட்கும் போது மது உண்ட வண்டாக மனம் மயங்கித்தான் போகிறது . குறிப்பாக என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே. அந்தக் கவியோ என்ற வரியில் கமலின் கைகளால் தன்னை காட்டி கேட்கும் ஆக்சன் , ஐயோ அட்டகாசம் போங்கள்.
"தனனனான தனனனானா தானா " ஸ்ரீதேவி சந்தம் சொல்லும்போது கமல் "அம்மாடியோ" என்று சொல்ல ஒரு சின்ன புருவம் உயர்த்தி ஸ்ரீதேவியின் performance' சூப்பர். "ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள், "சபாஷ்" கவிதை உலகம் கெஞ்சும் , கவிஞர் இதயம் கொஞ்சும்"

காதல் சொல்ல கவிதையை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன? கொடுத்த சந்தங்களில் தன் மனதை கமல் உரைக்க சிப்பியை திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது அவர்களுக்கு. இனி சிந்தை மயக்கும் சந்தத்தோடு  கவிதை பாடி கொள்ளட்டும்.
ஒரு சின்ன சவால் இந்த பாடலை நீங்கள் தலையாட்டமலோ, கைகளால் ,கால்களால் தாளம்  போடாமலோ ,உதடுகளால் முணுமுணுக்காமலோ ரசிக்க முடிகிறதா பாருங்கள் . தந்தனத் தத்தன தந்தனத் தத்தன என்ற ஜானகி தொடங்கும் முதல் வரியிலேயே நீங்கள் அவுட் .

திஸ் இஸ் த பவர் ஆஃப் லெஜெண்டரி peoples' லெஜெண்டரி கம்போசிஷன்.

என்ஜாய் த சாங்.


Comments

  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. கமல் ஸ்ரீதேவி pair, SPB ஜானகி pair, MSV, கண்ணதாசன் pair sokka வைத்திருப்பார்கள் நம்மை. உங்க சவாளுக்கெல்லாம் நான் வரலை Dheeksha.

    ReplyDelete
  2. I like very much kamalhaasan movie songs

    ReplyDelete
  3. இப்ப பார்க்கலாம் என்று ஶ்ரீதேவி உட்காரும் அழகும் சொல்லும் சந்தமும் கமல் பார்வையும்அழகோ அழகு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "