சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா"

மாலைப் பொழுதின் மயக்கத்திலிருந்து நீங்கள் வெளியே வரலாம். இன்னொரு மயக்கத்தில் ஆழ்த்தும் பாடலோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
நாயகியோ நாட்டியத் தாரகை. நாயகனோ ஒரு ரசிகன். சங்கீதத்தில் வந்த சந்தேகத்தை தீர்க்க நாயகியைவிடப் பொருத்தமானவர் யார் இருக்க முடியும்?  பாடலின் தொடக்கத்தில் வரும் எஸ்.பி.பி. யின் மற்றும் அவரைத் தொடர்ந்து வரும் சந்தியாவின் ஆலாபனையிலேயே நீங்கள் சொக்கித்தான் போவீர்கள். "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் " என்று தன் முதல் சந்தேகத்தை எழுப்புகிறார்  மம்மூட்டி . அந்த மயக்கத்தில் எஸ்.பி.பி கொடுக்கும் அழுத்தம் எல்லோரையும் மயங்க வைக்கும்.  நடராஜர் சிலை ,சிலையின் வழியே பானுப்பிரியாவை ஃபோகஸ் செய்யும் கேமரா. பாலச்சந்தர் டைரக்ஷன். அருமை. காதல் மயக்கத்தில் இரவு பகல் எது என்று தெரியாத குழப்பத்தில் இருக்கும்  நாயகியோ "என் வீட்டில் இரவு அங்கே இரவா? இல்ல பகலா? எனக்கும் மயக்கம் " என்று தன் பதில் சந்தேகத்தை வினவுகிறார்.  பானுப்பிரியாவின் முகத்தில் சட் சட்டென்று மாறும் பாவனைகள் கொள்ளை அழகு . பரதம் பயின்றவர் அல்லவா? பாவனைகளுக்கு கேட்கவா வேண்டும். மின் விளக்கின் துணையோடு தனியான நெடுஞ்சாலை. தூர்தர்ஷனில் இரவு ஒளிபரப்பு முடிவடைகிறது. இவர்கள் பேச்சு தொடர்கிறது. முதல் சந்தேகத்திற்கு தான் விடை கிடைக்கவில்லை. அடுத்த கேள்விக்கணைகளை தொடுக்கிறார் நாயகன். "எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள், துள்ளும் சுகங்கள், கொஞ்சம் நீ சொல்லித்தா" புலமைப்பித்தனின் வரிகள். நாயகியோ எனக்கும் தெரியாது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்று தான் வந்தது " (அதில் இருக்கும் படித்தேன் .பாத்து சொல்றேன்) 
என்று சொன்னவர் போன் பேசிக் கொண்டே ஒரு டைரியை எடுத்து அதில் இருக்கும் கடிதத்தை கண்டுபிடிக்கிறார். அந்தக் கயல்விழியாளின் தூக்கம் சொக்கும் விழிகள் அழகு. இப்படியே பேசிப் பேசி இரவு முடிகிறது. காலை விடிகிறது. வீணையின் பின்னே இருக்கும் பானு பிரியாவை வீணையின் வழியே இன்னொரு வீணையாக கேமரா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற மயக்கம் நாயகிக்கும் "என் வீட்டில் இரவு , அங்கே இரவா இல்ல பகலா ? என்ற மயக்கம் நாயகனுக்கும் இடம் மாறுகிறது. தூர்தர்ஷன் காலை ஒளிபரப்பு தொடங்குகிறது அந்த உலகப் புகழ்பெற்ற தூர்தர்ஷன் மியூசிக் உங்களை அந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். பாடல் முழுதும் ஆண் குரல் ஒலிக்கும்போது பானுப்பிரியாவின் முகபாவனைகளையும் பெண் குரல் ஒலிக்கும் போது மம்மூட்டியின் முக பாவனைகளையும் காட்சிப்படுத்தியிருக்கும் யுக்தி வெகு அழகு. இசை மரகதமணி. நான் சில சமயம் யோசித்ததுண்டு அப்படி என்னதான் பேசிக்கொள்வார்கள் இந்த காதலர்கள் நேரம் போவதே தெரியாமல் என்று. ஆனால் இப்படி மயக்கும் சங்கீதமாய் பாடிக்கொண்டிருந்தால் மரிக்கும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம் தானே? அதிலும் எஸ் பி பி யின் குரல் , அந்த கடைசி வரியில் வரும் எனக்கும் மயக்கத்தில் அவரின் ஒரு சிரிப்பு ஆஹா. ஆஹா ஆஹா.
SPB யோ குரலில் மயக்குகிறார். புலமைப்பித்தனோ பாடல் வரிகளால் மயக்குகிறார் பாலச்சந்தரோ டைரக்ஷனில் மயக்குகிறார் பானுப்பிரியாவோ விழிகளால் மயக்குகிறார்.

லவ்லி சாங். கேட்டால் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்.










Comments

  1. இந்தப் பாடலில் இவ்வளவு இருக்கா? உங்கள் விமர்சனத்தை படித்த பிறகுதான் தெரிகிறது. SPB மயக்கும் குரலும், சிரிப்பும் ... சான்சே இல்ல.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகள் இல்லை பாராட்ட ! வித்தியாசமான விமர்சனம், படத்தின் இயக்குனர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் மற்றும் பாடியவர்களின் ரசனையை கண் முன்னே பார்த்தது போல இருந்தது. வாழ்த்துக்கள். இந்த அளவுக்கு நான் ரசித்த தில்லை இப்பாடலை. நன்றி. God bless you always.

      Delete
  2. ஆஹா! ஆஹா !!ஆஹா!!!

    ReplyDelete
  3. 7 லே கணக்கா வில், உங்கள் கணக்கு சரியான பதிலாக.
    என்றும் அன்புடன்,
    மா பெ சா பிள்ளை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "