என்னவளே அடி என்னவளே/Ennavale Adi Ennavale
நாமெல்லாம் பேனா பென்சில் கார் சாவி இது போல எதையாவது காணாமல் போட்டுவிட்டு தேடிக் கொண்டிருப்போம் ஆனால் இந்த நாயகனோ இதயத்தை காணாமல் போட்டுவிட்டு தேடிக் கொண்டிருக்கும் வினோதமானவர்.
"காதலன்" இதயம் காதலியின் கால் கொலுசை தவிர வேறு எங்கே காணாமல் போயிருக்க கூடும். அதை அறிந்து தான் அவர் காதலியின் கால் தடத்தை தேடி காத்துக் கொண்டிருக்கிறார். காத்திருந்தால் நிமிஷமும் வருஷம் ஆவது இயல்பு தானே.
"என்னவளே அடி என்னவளே " என்ற உரிமை குரலிலேயே காதலியை மயங்க வைப்பதோடு நம்மையும் கட்டிப்போட்டு விடுகிறார் உன்னி கிருஷ்ணன் தனது வசீகரக் குரலில்.
"என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்"
கழுத்துவரை காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றால் காதல் என்பது பெரும் அவஸ்தைதான்.
காதலைச் சொல்ல சென்றால் மட்டும் வாய்மொழி மறந்து நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது என்று பலர் சொல்லக் கேள்வி.
இவருக்கோ பாவம் வாய் மொழி தாய்மொழி இரண்டுமே வசப்பட வில்லையாம். (பாடியவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட உன்னிகிருஷ்ணன் கவனத்தில் கொள்க. தாய் மொழி மறந்து, தமிழ் மொழியில் பாடி தேசிய விருதை தட்டிச் சென்றவர் இவர்/)
"வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டையும் உருளுதடி" (கவிஞர் வைரமுத்துவின் உபயம்)
இப்படி ஒரு உணர்வை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா.
"கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி" (வைரமுத்துவின் வரிகள்)
இது காதலர்கள் மட்டும் அனுபவிக்கும் ஒரு நிலை. "இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி" என்ற வரிகளின் போது ஒரு பக்கம் பனி. மறுபக்கம் நெருப்பு. வினோதமான சூழ்நிலைதான் காதல். வாழ்வா சாவா என்பது உன் ஒற்றை வார்த்தை பதிலில் உள்ளது என்று மலையிலிருந்து குதிக்க போகும் பிரபுதேவாவை காப்பாற்றி (காதல்) கடலில் தள்ளி விட்டு விடுவது எந்த விதத்தில் நியாயம் நக்மா? ஐயோ பாவம் பிரபுதேவா. ரஹ்மானின் இசையும் உன்னி கிருஷ்ணன் குரலும் உங்களை என்னென்னவோ செய்யும். உங்களையும் காதல் கடலுக்குள் தள்ளி விட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை உன்னி கிருஷ்ணனுக்கு பெற்று தந்த பாடல் இது. உன்னி கிருஷ்ணனின் முதல் பாடலும் இதுவே. இப்படத்தின் பாடல்களை( குறிப்பாக இந்த பாடலை) கேட்பதற்காகவே 1994 இல் கேரளாவில் நிறைய பேர் டேப் ரெக்கார்டர் வாங்கியதாக ஒரு செய்தி படித்தேன்.
காதல் வயப்பட்டால் இவர்களுக்கு காற்றையும் வடிகட்டும் ஆற்றல் வந்துவிடும் போலும். எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.
"வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்."
வைரமுத்துவின் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.
பார்த்து கேட்டு ரசியுங்கள்
"உன் காலடி எழுதிய கோலங்கள்
ReplyDeleteபுதுக் கவிதைகள் என்றுரைப்பேன்."
காதலியின் கால் தடத்தைத் தேடிச் சென்ற காதலன் அவள் காலடித் தடங்களில் ஒரு கவிதையைக் காண்கிறான்❤️❤️❤️
ஒவ்வொரு பாடலையும் புது விதமாய் ரசிக்க வைக்கும் ஒரு ரசிகை தீக்ஷா.
Fantastic job ❤️
Keep writing ❤️
மலையிலிருந்து குதித்தால் தப்பிக்கவே வழி இல்லை. கடலில் தள்ளி விட்டால் நீச்சல் அடித்து தப்பி வந்து , காதல் சொர்க்கமா, நரகமா என்று அவரே முடிவு பண்ணி கொள்ளட்டும் என்று நக்மா நினைத்தாரோ என்னவோ.
ReplyDeleteSuper. அப்படித்தான் இருக்க வேண்டும்.
Delete