பூவில் வண்டு கூடும்/ Poovil Vandu Koodum

அந்த வனத்தில் பூத்த அழகிய பூ அது. பூ பூத்த செய்தியை வண்டிற்கு யார் கூறியது. பூங்காற்றே அதை வண்டின் காதில் ஓதியது. காதல் கொண்ட வண்டு வந்து பூவில் தேன் அருந்தியது. நாணம் தாளாத வண்ண பூவோ கண்கள் மூடியது. " இப்படி ஒரு கற்பனை வைரமுத்துவின் எண்ணத்தில் உதித்தது . பாடலோ எஸ்பி.பி பாடியது.

"பூவில் வண்டு கூடும், கண்டு பூவும் கண்கள் மூடும் . "

அதைக்கண்ட மற்ற பூக்கள் சும்மா இருக்குமா. எல்லாம் சேர்ந்து ஒரு மாநாடு நடத்தின. மாநாட்டின் பேசுபொருள் " அதோ பாருங்கள், அவளின் காதலன் வந்துவிட்டான்." வண்டுகள் எல்லாம் சேர்ந்து தாலாட்டு பாடின. தாலாட்டின் பாடுபொருள் ''அவர்கள் காலமெல்லாம் இப்படியே  மகிழ்ந்து கண்ணுறங்கட்டும்

" பூவினம்   மாநாடு போடும் ,வண்டுகள் தாலாட்டு பாடும் .  நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்" என்ன ஒரு அழகான வரிகள்.

பாரதிராஜாவின் காதல் ஓவியம் இது. படத்தின் நாயகன் ஒரு பாடகன் ஆனால் பார்வையற்றவன். அவன் பாடலில் திளைத்த நாயகியும் கண்களை மூடினாள். அவள் இசையில் மயங்கி கண்கள் மூடினாளா ? இல்லை நாயகன் பார்க்காத உலகத்தை தான் பார்க்க வேண்டாம் என்ற எண்ணிக் கண்கள் மூடினாளா? அது கவிஞருக்கும் இயக்குனருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

அதன் பிறகு வந்த வரிகள் எல்லாம் படத்தில் நாயகனுக்கு எவ்வளவு பொருந்திதோ தெரியவில்லை. ஆனால் பாடலின் நாயகன் எஸ்பிபி க்கும் இசையின் நாயகன் இளையராஜாவுக்கும் அளவெடுத்து தைத்த சட்டை போல அவ்வளவு அழகாக பொருந்தியது.

இவரின் கீதம் வானம் போக அந்த மேகம்  பாலம் போடுகிறது

"கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலம் போடும் , நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்"

"வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் " என்று விஸ்வரூப தரிசனம் காட்டும்  இவரின் பாதம் மீது மோதும் ஆறும்  சுப்ரபாதம் பாடுமாம்.

அனைவரின் தாகம் தீர்க்கும் ஆறே இவரின் ராகம் மீது தாகம் கொண்டு நின்று போகுமாம்.

இளையராஜாவின் இசை

"காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்

வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ

நம்தம்" அவர் சொன்னது அனைத்தும் முற்றிலும் உண்மை. அதற்கு மொத்த தமிழ்நாடும் சாட்சி . நானும் சாட்சி.

இயக்குனர் (பாரதி) ராஜாவும் ,இசை (இளைய)ராஜாவும் , ராக ராஜா ( எஸ்பிபி)வும் , தமிழ் ராஜா (வைரமுத்து)வும் சேர்ந்து நடத்தும் தர்பாரை கண்டு கேட்டு பரவசம் அடையுங்கள்.   " பூவில் வண்டு கூடும் 

https://youtu.be/1ZYYOvy8mWI


Comments

  1. மிக அற்புதமான விமர்சனம்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலுக்கு தங்களுடைய விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். விமர்சனம் தருவீர்களா? நன்றி

    ReplyDelete
  2. தங்கள் விமர்சனம் பாடலுக்கு பாடல் மெருகெரிக் கொண்டே போகிறது Dheeksha.

    ReplyDelete
  3. "பூவில் வண்டு கூடும், கண்டு பூவும் கண்கள் மூடும் . "

    இந்த இரண்டு வாரிகளுக்குள் இத்தனை அர்த்தமா? அடேங்கப்பா!!

    ஒரு அற்புதமான கற்பனைக் காட்சியைக் கண்கள் முன் கொண்டு வந்தது உங்கள் விமர்சனம்.

    Keep rocking dheeksha❤️

    ReplyDelete
  4. இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அருமையாக அமைந்து இருக்கும்.விமர்சிக்க வார்த்தையே இல்லை. அத்தனை நயம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "